இந்த காரில் இருக்கும் ஸ்பெசல் இது தான் – தான் வாங்கிய புது கார் பற்றி ஏ.ஆர். ரஹ்மான் சொன்ன விஷயம்

0
181
- Advertisement -

தான் வாங்கி இருக்கும் புது கார் தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர்
ஏ.ஆர். ரஹ்மான். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம்.

-விளம்பரம்-

பின்பு பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் சினிமாவில் கால்தடம் பதித்தார்.
தமிழில் இவர் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார்.

- Advertisement -

ஏ.ஆர்.ரகுமான் குறித்த தகவல்:

இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
தற்போது ஏ.ஆர் ரகுமான் அவர்கள் பிசியாக பல படங்களில் பணியாற்றியும், இசை கச்சேரிகளை நடத்தியும் வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க ஏ.ஆர். ரகுமான் குறித்து சோசியல் மீடியாவில் பல விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இவர் AI தொழில்நுட்பம் மூலம் இளைஞர்களை திறமைகளை அழிக்கிறார் என்றெல்லாம் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் புது கார்:

இதற்கு ஏ.ஆர் ரகுமான் விளக்கமும் அளித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் புது கார் ஒன்றை வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மஹிந்திரா நிறுவனம் புதிய EV-BE6, XEV 9E கார்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த BE6 மற்றும் XEV 9E கார்களுக்கு ஏ.ஆர்,ரகுமான் தான் ஒலி வடிவமைத்து இருக்கிறார். இது தொடர்பாகவே ஏற்கனவே ஏ.ஆர் ரகுமான் பதிவில் நான் ஓலி வடிவமைத்த காரிலிருந்து தனக்கொரு காரை பதிவு செய்கிறேன் என்று கூறினார்.

-விளம்பரம்-

ஏ.ஆர்.ரகுமான் பதிவு:

தற்போது XEV 9E காருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ஏ.ஆர்.ரகுமான், எனக்கு பிடித்த இந்திய EV கார் மஹிந்திரா XEV 9e வாங்கினேன். ஸ்டைலான இந்த காருக்கான ஒலியை நாங்கள் தான் வடிவமைத்தோம். இதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டோம் என்று குறிப்பிட்டிருக்கிறார. தற்போது இவருடைய பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் குறித்த தகவல்:

சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான், அவர் மனைவி சாய்ரா இருவரும் பிரிய இருப்பதாக அறிவித்து இருந்தார்கள். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து இவர்கள் விவாகரத்து பெறுவது பலருக்கும் பேர் அதிர்ச்சி தான். இது தொடர்பாக இருவரும் அறிக்கை விட்டு இருந்தார்கள். அதோடு இவர்களை பிரிவுக்கு பல்வேறு காரணங்களை பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், உண்மையில் இவர்களின் பிரிவிற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.

Advertisement