ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியை போலீஸ் பாதியிலேயே தடுத்து நிறுத்தி இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராஜ் பகதூர் மில்ஸ் பகுதி அருகே இருக்கும் திறந்தவெளியில் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சினிமா லைப்மென்ட்ஸுக்கு நிதி திரட்டுவதற்காக நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த பகுதியில் குவிந்திருந்தார்கள்.
Extremely disappointing of #PunePolice to shut down #ARRahman ‘s concert in #Pune at 10.14PM. While the rule of 10pm cutoff is understood, this is nt how a visiting artist of his stature should hav been treated. He was almost on his finale song when this happened👇🏻cc @CPPuneCity pic.twitter.com/HYEor4wiYX
— Irfan (@IrfanmSayed) April 30, 2023
இந்த நிகழ்ச்சி மாலையில் தொடங்கப்பட்டது. இதில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகியிருந்த பல பாடல்கள் இசையமைக்கப்பட்டது. பின் இரவு 10 மணி ஆனதும் ஏ ஆர் ரகுமான் ‘தில் சே’ படத்தில் இடம் பெற்ற ‘சைய்ய சைய்யா’ என்ற பாடலை பாடத் தொடங்கிய போது போலீஸ்காரர் ஒருவர் மேடையின் மீது எறி தன்னுடைய வாட்ச்சை காண்பித்து நிகழ்ச்சியை நிறுத்துங்கள் என்று கையசைத்து இருக்கிறார். ஆனால், சில இசை கலைஞர்கள் அதை கவனிக்காமல் இசைத்துக் கொண்டே இருந்தார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் இசையை நிறுத்திய போலீஸ்:
இதனால் கோபம் அடைந்த போலீஸ் இசை கலைஞர்களுடைய அருகில் சென்று உடனடியாக இசையை இசைப்பதை நிறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பயங்கரமாக சத்தம் போட்டு கூச்சலிட்டு இருக்கின்றனர். பின் ஏ ஆர் ரகுமான் போலீசாரின் வலியுறுத்தலுக்கு இணங்கி மேடையில் இருந்து இறங்கினார். இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்திற்கு இடையில் பயங்கர சலசலப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
#ViralVideo of AR Rahman's concert stopped midway by #PunePolice#ARRahman #ARRahmanconcert #pune #punepolice pic.twitter.com/O8bixICfN4
— Whats In The News (@_whatsinthenews) May 1, 2023
ஏ.ஆர்.ரகுமான் குறித்த தகவல்:
இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் . இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார்.
ரகுமான் திரைப்பயணம்:
மேலும், இவர் மேற்கத்திய இசையமைத்து மக்களுக்கு கொண்டு சென்றவர். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர். சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலைநிமிரச் செய்தவர் ரகுமான். இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார் ரகுமான்.
#ViralVideo of AR Rahman's concert stopped midway by #PunePolice#ARRahman #ARRahmanconcert #pune #punepolice pic.twitter.com/O8bixICfN4
— Whats In The News (@_whatsinthenews) May 1, 2023
ரகுமான் இசை அமைக்கும் படங்கள்:
தற்போது இவர் பல படங்களில் இசை அமைத்து வருகிறார். தற்போது இவர் இசையில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி இருக்கிறது. அதனை அடுத்து இவர் “லாம் சலாம்” என்ற திரைபடத்தில் பாடல்களை இயக்குவதுதில் மிகவும் மும்முரமாக இருக்கிறார். இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கி வருகிறார். இப்படி ரகுமான் பல படங்களில் பிசியாக இசை அமைத்து வருகிறார்.