அம்மா இறந்த பின்னர் ஆஸ்காரை துளைத்துள்ள ரஹ்மான் – பின்னர் அதை எப்படி கண்டுபிடித்துள்ளார் பாருங்க.

0
2644
ar
- Advertisement -

தமிழ் சினிமாவின் இசைப்புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் தாயார் காலமாகி இருக்கிறார். ” இசைப்புயல், மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். ஏ.ஆர். ரகுமான் அவர்களின் உண்மையான பெயர் திலீப் குமார். ரோஜா படம் துவங்கி இன்று வரை தமிழ், தெலுகு, இந்தி என்று பல மொழிகளில் இசையமைத்து உள்ள இவருக்கு இந்திய அரசால் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதே போல ஆஸ்கார் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

-விளம்பரம்-

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 2009- ஆம் ஆண்டு ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் ஒரிஜினல் ஸ்கோருக்காக ஒரு விருதையும், அதே படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்காக இன்னொரு விருதையும் பெற்று இரண்டு அகாடமி விருதுகளை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை உருவாக்கினார். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மான் இந்த இரண்டு விருதுகளையும் தொலைத்து விட்டு பின்னர் கண்டுபித்ததை பற்றி ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்றை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : சுல்தான் படத்தில் வந்த கடா யார் தெரியுமா ? 90ஸ் கிட்ஸ்கள் விரும்பி பார்த்த இதில் இருந்து வந்தவர் தானாம்.

- Advertisement -

ஏ ஆர் ரஹ்மான் தாயார் கடந்த டிசம்பர் மாதம் காலமானார். இதற்கு பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் தனது தாயார் இறந்ததால் தனது விருதை காணாமல் போனது குறித்து அந்த பேட்டியில் பேசியுள்ள அவர், ஆஸ்கர் விருது கிடைத்ததும் என் அம்மா தாயார் அந்த விருதுகளை துணியில் சுற்றி, அலமாரியில் பாதுகாப்பாக வைத்திருத்திருந்தார். விருது கிடைத்ததில் இருந்து அது தங்கத்தால் ஆனது என்று அவர் நினைத்துக்கொண்டார்.

அம்மா இறந்த பின்னர் அவர் வீட்டிலிருந்து ஆஸ்கார் விருதுகளை என் வீட்டிற்குப் கொண்டு செல்லலாம் என்று நினைத்து அம்மா வைத்திருந்த அலமாரியில் தேடினேன். ஆனால், அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு தான் விருதுகள் தொலைந்துவிட்டது என்று நினைத்தேன். அதன் பின்னர் என் மகன் ஏ.ஆர்.அமீன் விருதுகள் வேறு அலமாரியில் இருக்கும் விஷயத்தை என்னிடம் சொன்னார். அப்புறம் அதை தேடி கண்டுபிடித்து எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார் ரஹ்மான்.  

-விளம்பரம்-
Advertisement