ரோஜா படத்தின் பாடல்களை முதலில் கேட்ட உடன் நான் நொறுங்கிப் போய்விட்டேன் என்று ஏ ஆர் ரகுமான் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் .

இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். மேலும், இவர் மேற்கத்திய இசையை மக்களுக்கு கொண்டு சென்றவர். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர்.

Advertisement

ஏ ஆர் ரகுமான் திரைப்பயணம்:

சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலைநிமிரச் செய்தவர் ரகுமான். இப்படி குறுகிய காலத்திலேயே கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார் ரகுமான். தற்போது இவர் பல படங்களில் இசை அமைத்து வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளியான கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றும் படங்கள்:

தற்போது இவர் இசையில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி இருக்கிறது. அதனை அடுத்து இவர் “லால் சலாம்” என்ற திரைபடத்தில் பாடல்களை இயக்குவதுதில் மிகவும் மும்முரமாக இருக்கிறார். இந்த நிலையில் ரோஜா படத்தின் பாடல்கள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ரோஜா. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருந்தார்.

Advertisement

இந்த படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக ஆனார். அதோடு தன்னுடைய முதல் படத்தின் பாடல்களிலே தேசிய விருதையும் இவர் வாங்கி இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் ரோஜா படம் குறித்து கூறியது, ரோஜா படத்தின் பாடல்கள் தமிழிலும், இந்திலும் பெரிய அளவு வெற்றி பெற்றது. ஆனால், இந்த பாடல்களின் ஒலிப்பதிவு கேட்டபோது மோசமாக இருந்தது. இதனால் என்னுடைய இதயமே நொறுங்கிப் போய்விட்டது. ஆரம்பத்தில் ரோஜா படத்தின் ஒலிப்பதிவு மாஸ்டர் இடம் இருந்து வந்தபோது நான் மிகவும் மனமடைந்து விட்டேன்.

Advertisement

ரோஜா படம் பாடல்கள்:

இது மிகவும் மோசமாக இருக்கிறது என்று எனக்கு தோன்றியது. பின்னர் இந்த ஆல்பம் மூன்று நான்கு முறை திரும்பி சென்றது. ஆனால், படத்தின் ரிலீஸ் தேதி வருவதற்குள் இதை மாற்றி அமைப்பது சாத்தியம் இல்லாதது என்று கருதி சமரசம் செய்து கொண்டு வெளியிட்டோம். ரோஜா படம் வந்த காலகட்டத்தில் இசையமைப்புகள் எல்லாம் குறைந்த தரத்தில் இருந்தது. ஆனால், ரோஜா படம் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இன்றும் ரசிகர்கள் அந்த பாடல்களை விரும்பி கேட்டு வருகிறார்கள். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதேபோல் ஹிந்தியில் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. எங்களுக்கு தெரியவே தெரியாது என்று கூறியிருந்தார்.

Advertisement