ஏ ஆர் ரகுமானின் வாழ்க்கையை மாற்றிய அவரின் அம்மாவின் நகைகள் – அவரே சொன்ன உருக்கமான கதை

0
274
- Advertisement -

ஸ்டுடியோ குறித்து ஏ ஆர் ரகுமான் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவருடைய இசைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் தன்னுடைய இசைக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவிற்கு பெருமையை சேர்த்தவர். சமீபத்தில் இவர் ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகி இருந்த லால் சலாம், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த அயலான் போன்ற படங்களுக்கு இசை அமைத்து இருந்தார்.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் திரைப்பயணம்:

தற்போது இவர் ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். அதோடு இவர் நிகழ்ச்சி என்றாலே டிக்கெட் சில நிமிடங்களில் விற்பனையாகி விடும். இது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி சமீபத்தில் நடந்தது.

ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி:

பல சர்ச்சைகளுக்கு பிறகு ரகுமான் கச்சேரி நடந்தது. தற்போது ஏ ஆர் ரகுமான் அவர்கள் துபாயில் மிகப்பெரிய ஸ்டுடியோ ஒன்றை அமைத்திருக்கிறார். இது ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டுடியோ என்று கூறப்படுகிறது. இந்த ஸ்டுடியோவில் உலகில் விலை உயர்ந்த இசைக்கருவிகள், ரெக்காடர்கள், மிக்சர்கள் என்று தேவையான அனைத்தையுமே வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தேவைக்கேற்ப அறையில் உயரத்தையும், அகலத்தையும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் அளவிற்கு நவீன வசதிகளோடு ஸ்டுடியோவை வைத்திருக்கின்றார்.

-விளம்பரம்-

ஏ ஆர் ரகுமான் பேட்டி:

இதற்கு ‘Firdaus Studio’ என்று பெயர் வைத்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் ஏ ஆர் ரகுமான் உடைய ஸ்டுடியோவில் ரெகார்டிங் கூட செய்ய முடியாத அளவிற்கு இருந்தார். இன்று உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு அதிநவீன பொருள்களை வைத்து ஸ்டூடியோவை ஆரம்பித்திருக்கிறார். இதன் மூலம் இவர் நம் நாட்டின் இசையை பெருமைப்படுத்தும் அளவிற்கு செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ ஆர் ரகுமான், நான் முதன் முதலில் ஸ்டுடியோ அமைத்த போது என்னிடம் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை.

ஸ்டுடியோ குறித்து சொன்னது:

அப்போது ஸ்டூடியோவிற்காக அம்ப்லிஃபையர், ஈக்குவலைசர் போன்ற அடிப்படை கருவிகள் கூட என்னால் வாங்க முடியவில்லை. ரொம்ப கஷ்டப்பட்டேன். என்னுடைய ஸ்டுடியோவில் ஏசி, செல்பி, ரெக்கார்பெட் மட்டுமே இருக்கும். வேறு எதுவுமே கிடையாது. எதையும் வாங்க பணமும் இல்லாமல் இருந்தேன். என்னுடைய அம்மாவின் நகையை அடகு வைத்து தான் முதன் முதலில் ரெக்கார்டர் ஒன்றை ஸ்டூடியோ விற்கு வாங்கினேன். அந்த தருணம் தான் என்னுடைய வாழ்க்கையே மாற்றிய தருணம். என் எதிர்காலத்தை நான் உணர்ந்த தருணம் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Advertisement