தலைவா உண்மையா நீங்க தான் இத ஷேர் பன்னீங்களா? ரஹ்மான் பகிர்ந்த இளம் நடிகையின் ரீல்ஸ்ஸால் ஷாக்கான ரசிகர்கள்.

0
491
- Advertisement -

இசைய்புயல் ஏ ஆர் ரஹ்மான் இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கும் இளம் பெண்ணின் ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கிட்டத்தட்ட இவர் சினிமா உலகில் இசையமைப்பாளராக நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. மேலும், இவர் சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் புகழ் பெற்றவர். தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் பிசியாக இசை அமைத்து வருகிறார்.

- Advertisement -

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரஹ்மான் எப்போதாவது தான் பதிவிடுவார். அதிலும் ஏதாவது முக்கிய நிகழ்வுகளை மட்டும் தான் பதிவிடுவார். இப்படி ஒரு நிலையில் இளம் நடிகை ஒருவரின் ரீல்ஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் ரஹ்மான் ஏன் இந்த ரீல்ஸ்ஸை பகிர்ந்தார் என்று குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதனால் அந்த நடிகையின் ரீல்ஸ்ஸில் கூட கமெண்ட்கள் குவிவந்தது.

ஆனால், உண்மை என்னவெனில் அந்த நடிகை சமீபத்தில் ரஹ்மான் இசையமைத்த ‘pippa’ படத்தின் பாடலுக்கு ரீல்ஸ் செய்து இருக்கிறார். அதனால் தான் அந்த ரீல்ஸ்ஸை ரஹ்மான் பகிர்ந்து இருக்கிறார். இருப்பினும் இந்த பாடலுக்கு எத்தனையோ பேர் ரீல்ஸ் செய்து போட்டாலும் அதனை பகிராமல் இளம் நடிகை செய்த இந்த ரீல்ஸ்ஸை ரஹ்மான் பகிர்ந்து இருப்பது தான் கேலிக்கு உள்ளாகி வருகிறது.

-விளம்பரம்-

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துல pippa திரைப்படத்தில் மிருணாள் தாக்குர், இஷான் கட்டர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் அமேசான் பிரைமில் கடந்த பத்தாம் தேதி ஹிந்தியில் வெளியாகியிருந்தது. இந்த படம் 1971 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரின் போது நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.இதில் பிரபல வங்க மொழி எழுச்சி கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாமின் ‘கரார் ஓய் லூஹோ கோபட்’ என்ற தொடங்கும் பாடல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதை தற்போது இருக்கும் காலத்துக்கு ஏற்ப ஏ ஆர் ரகுமான் மாற்றம் செய்திருந்தார்.

ஆனால், இதற்கு நஸ்ருல் இஸ்லாம் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் தாளம் மற்றும் ட்யூனை மாற்றி பாடலை உருவாக்கி இருக்கும் விதம் தங்களுக்கு அதிர்ச்சி அளித்திருப்பதாக கூறி இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கபூர் ஃபிலிம்ஸ், மன்னிப்பு கேட்டு கொண்டதோடு பாடலை மாற்றியது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியிருந்தார்கள்.

Advertisement