தன்னுடைய வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள் குறித்து ஏ.ஆர். ரகுமான் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்த இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம்.

பின்பு, பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான், முதல் முதலாக இசையமைத்தது மலையாள திரைப்படத்தில் தான். ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் ‘ரோஜா’ படம் வெளியானதால் இந்த படமே ரஹ்மானின் முதல் படமாக மாறியது. தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு ‘ஆஸ்கார் விருதுகள்’ கிடைத்தது நாம் அறிந்ததே.
ஏ.ஆர்.ரகுமான் திரைப்பயணம்:
தற்போது இவர் பல நடிகர்களின் படங்களில் பிஸியாக பயணித்து வருகிறார். இப்படி 30 வருடங்களுக்கும் மேலாக ரகுமான் தன்னுடைய இசையால் மக்களை கட்டி போட்டு வைத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த அளித்த பேட்டியில் ஏ ஆர் ரகுமான், இசைக்கு வயது கிடையாது. நமக்கு வயதானாலும் இசைக்கு வயதாகாது. அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் தொடர்ச்சியாக பல ஏற்ற இறக்கங்களை பார்க்கிறோம். அதுவும் சினிமாவில் இருக்கிறோம். நான் ஆஸ்கர் மேடையில் அன்பின் வழியை தேர்ந்தெடுக்கணுமா? இல்லை வெறுப்பின் வழியை தேர்ந்தெடுக்கணுமா? என்று கேட்டார். நான் அன்பின் வழியை தான் சொல்வேன்.

ஏ.ஆர்.ரகுமான் பேட்டி:
அந்த வார்த்தையை இப்போ வரைக்கும் கடைப்பிடித்துக் கொண்டு வருகிறேன். இதை எல்லாம் நாம் முதலில் முடிவு பண்ணிடனும். நம்ம வாழ்க்கையில் என்ன நடந்தாலும் இதே மாதிரி தான் இருக்கணும் என்று முடிவு பண்ணி வைத்துக் கொள்ளணும். நாம் எல்லா இடத்திலும் சரியாக இருக்க முடியாது. இப்ப நான் அவசரமாக அவசரமாக ஃபிளைட்டை பிடிக்கப் போயிட்டு இருக்கிறேன். அப்போது என்னிடம் 10 பேர் சுற்றி நின்று போட்டோ கேட்டால் என்னால் என்ன பண்ண முடியும்? அந்த சமயத்தில் நாம் எதை பண்ண முடியும்னு யோசிக்கணும். அந்த சமயத்தில் நாம் முடிந்த அளவுக்கு நல்லவனாக இருக்கணும். என்னோட சின்ன வயதில் என் அப்பா இறந்துவிட்டார்.
வாழ்க்கை அனுபவம்:
அதற்குப் பிறகு என்னுடைய பாட்டி இறந்துட்டார், நான் ஒரு மயில் வைத்திருந்தேன். அதுவும் இறந்து விட்டது. அதற்குப் பிறகு ஒரு நாய்க்குட்டி வைத்திருந்தேன். அதுவும் இறந்து விட்டது. அதெல்லாம் என்னை விட்டு போன பிறகுதான் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை என்று உணர்ந்தேன். நாம் எந்த நோக்கத்தில் போறமோ அது அன்பாக இருந்தாலும் இசையாக இருந்தாலும் அதை எப்படி தக்க வைக்க போறோம் என்றுதான் தெரிந்து கொள்ள வேண்டும். எது நமக்கு ரொம்ப பிடித்தாலும் அது நம்மை விட்டு போய்விடும். அது கடவுள் எனக்கு கொடுத்த பயிற்சின்னு நான் நினைக்கிறேன்.

வாழ்க்கையில் கற்று கொண்டது:
அதனால் இதை எல்லாம் சமாளிக்க கற்றுக் கொள்ளணும். சின்ன வயதில் எனக்கு ஒரு இசை கருவி மேல அவ்ளோ ஆசை இருந்தது. எனக்கு எப்போ கிடைக்கும், எப்போ கிடைக்கும்னு பார்த்துக் கொண்டே இருந்தேன். அது எனக்கு கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு அதை நான் நினைப்பதை விட்டுட்டேன்.
உடனே அது என்னிடம் வந்துவிட்டது. அப்போ இந்த மாதிரி எல்லா விஷயத்திலும் தான் நடக்கும். கொஞ்சம் தள்ளி இருந்தால் நமக்கு தேவையானது எல்லாமே கிடைக்கும்னு நான் நினைத்தேன். இதுதான் வாழ்க்கை என்று எனக்கு புரிந்தது என்று ரொம்ப உணர்வுபூர்வமாக பேசியிருந்தார்.






