இப்போ வரை அப்பாவை பற்றி வெளியே பேசாததற்கு காரணம் இது தான்- முதல் முறையாக மனம் திறந்த ஏ.ஆர்.ரகுமான்

0
281
- Advertisement -

தன்னுடைய தந்தை குறித்து மனம் திறந்து ஏ.ஆர் ரகுமான் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவருக்கு சிறு வயதில் இருந்தே இசையில் அதிக ஆர்வம் உண்டாம். தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக் கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம்.

-விளம்பரம்-

பின்பு பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான், முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘யோதா’ என்ற திரைப்படம் தான். ஆனால், ‘யோதா’ படம் வெளியாவதற்கு முன்பு தமிழில் ‘ரோஜா’ படம் வெளியானதால் அதுவே ரஹ்மானின் முதல் படமாக மாறியது. தான் இசை அமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் ஆனது.

- Advertisement -

ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த தகவல்:

இதை தொடர்ந்து கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இவரின் இசை திறமைக்காக தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது தொடங்கி ஆஸ்கார் மற்றும் கிராமிய விருதுகளையும் சர்வதேச அளவில் மற்றும் தனக்கான அங்கீகாரத்தை பல இடங்களில் தடம் பதித்துள்ளார்.

ஏ.ஆர் ரகுமான் திரைப்பயணம்:

இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட்,கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். இவருடைய இசைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் தன்னுடைய இசைக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவிற்கு பெருமையை சேர்த்தவர். கடந்த ஆண்டு இவர் ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகி இருந்த லால் சலாம், பொன்னியின் செல்வன், அயலான் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்து இருந்தார்.

-விளம்பரம்-

ஏ.ஆர்.ரகுமான் பேட்டி:

தற்போது இவர் ஜீனி,சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம், கமலஹாசன்-சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப், காதலிக்க நேரமில்லை, சாவா, லாகூர் 1947, சூர்யா 45, தேரே இஷ்க் மே போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ.ஆர் ரகுமானிடம் உங்களை அப்பாவை பற்றி இதுவரை ஏன் பேசவில்லை? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

அப்பா குறித்து சொன்னது:

அதற்கு ஏ ஆர் ரகுமான், அப்பாவுடைய மரணமே ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. ஒரு இருள் போல இருந்தது. அதனால் தான் அவரைப்பற்றி அதிகம் பேசவில்லை. அப்பா தன்னுடைய கடைசி காலத்தில் ரொம்பவே கஷ்டத்தை அனுபவித்து இருந்தார். என்னுடைய தந்தையிடமிருந்து தான் கருணை, தாராள மனப்பான்மை, ஊக்கம், விவேகம் போன்ற எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement