முஸ்லிமாக இருந்தும் சைவத்திற்கு மாறிய ரஹ்மான் – மொஹரம் பண்டிகையில் அவர் போட்ட பதிவு.

0
367
arrahman
- Advertisement -

ஏ.ஆர்.ரஹ்மான், பல இடங்களுக்குச் சென்று, ஆஸ்கர் மேடைக்குச் சென்று ஆஸ்கர் வாங்கியபோதுகூட அங்கும் தமிழில் பேசி தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அந்த மேடையில் எல்லாப் புகழும் இறைவனுக்கு என்று பேசியிருந்தார். அது நம் அனைவருக்குமே பெருமைதான். அமித்ஷா இந்தியை தேசிய மொழியா மாற்ற சொல்லும் போது முதல் ஆளாக இரல் கொடுத்தவரும் இவரே.ரகுமான் 1966 சனவரி 6 ஆம் திகதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர் ஆகும்.அம்மா பெயர் கஸ்தூரி.அக்கா பெயர் ஏ.ஆர்.ரெய்கானா.அக்கா மகன் ஜி.வி.பிரகாஷ். தங்கை பாத்திமா,இஷ்ரத் மற்றும் சகலை ரகுமான்(நடிகர்).

-விளம்பரம்-
arrahman

இசையுலகப் பயணத்தை 1985 இல் ஆரம்பித்தார். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கித்தார் வாசிக்கக் கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

- Advertisement -

இந்துவில் இருந்து இஸ்லாமியனாக மாறியது :-

ஏ.ஆர்.ரகுமானின் தாய் கஸ்தூரி ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு உள்ளவர்.அவர் குடும்ப சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் சோவித் ரவி கரிகுலா சாதத்தை சந்தித்து பேசினார் குடும்ப பிரச்சினைகளை கேட்டு தெரிந்து கொண்டு பிறகு ஏ.ஆர்.ரகுமானின் அடையாளங்களை தெரிந்து கொண்டு திலீப் குமார் என்று ஏ.ஆர்.ரகுமானின் பெயரை மாற்ற சொன்னார்.இந்தக் கேள்விப்பட்டால் ஏ.ஆர்.ரகுமான் சரி இஸ்லாமுக்கு மாறிவிடலாம் என்ற ஒரு சிந்தனையில் இருக்கும் போது நஸ்ரித் மூவி கபீர் உடைய தி ஸ்ப்பிரிட்டாப் மியூசி என்ற இசையை கேட்டு இஸ்லாமிய மதத்தின் மீது ஒரு தாக்கம் கொண்டார்.1984 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமானின் தங்கைக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்படும் போது கரிமுகன்லால் கத்திரியின் உதவியுடன் உடல்நிலை சரிவு பெற்ற சரி செய்யப்பட்டது. அதன் பின்பு குடும்பத்தினர் முழுவதும் இஸ்லாமிய மதத்திற்கு மாறினர் அதன் பின்பு 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திலீப் குமார் என்ற தனது பெயரை அல்லாஹ் ரகு ரகுமான் என மாற்றிக் கொண்டார். ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் உங்களை உங்களை யாரும் கட்டாயபடுத்தினார்களா என்று கேட்டபோது இல்லை நானும் என் குடும்பமும் இஸ்லாமிய மதத்தின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக சுயமாக சுய விருப்பத்துடன் மாறினோம் என்று கூறினார்.

ஆசியாவின் நவீன ஸ்டோடியோ :-

1992 இல் தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக் கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003-இல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்குத் தேசிய விருதுகள் வாங்கித் தந்தன. முத்து திரைப்படம் சப்பானில் வெற்றி பெற்று, இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2012 இல் இவரால் வாங்கப்பட்ட ஏ.எம்.ஸ்டுடியோ ஆசியாவிலேயே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது.

-விளம்பரம்-

அமித்ஷாக்கு பதிலடி கொடுத்த ரஹ்மான் :-

மாநிலங்களுக்கு இடையே மக்களுக்கு ஆங்கிலம் பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை குறைத்து , அதிக அளவில் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா 37வது பாராளுமன்ற அலுவல் மொழிக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பதிவு ஒன்று இதற்கு பதிலடி கொடுத்தது போல இருந்தது. தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் அதில் ’தமிழணங்கு’ என்றும் ’இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்னும் பாரதிதாசன் வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் கையில் ழகரத்தை ஏந்திக்கொண்டு , கருத்த தேகம் கொண்ட ஒரு பெண் துள்ளிக்குதிப்பது போல படம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது .அணங்கு என்றால் தேவைதை குறிக்கும் என்கிறார்கள். அதன்படி , தமிழணங்கு என்பது தமிழ் தேவதை என பொருளாகிறது. இந்த பதிவு ஏ.ஆர்.ரஹ்மான் அமித்ஷாவிற்கு கொடுத்த பதிலடி என நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வைரலாக ஷேர் செய்து வந்தனர்.

பத்து நாட்கள் சைவம் தான் சாப்பிடுவேன் :-

ஏ.ஆர். ரஹ்மான் தற்போது, இவரின் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், “அடுத்த பத்து நாட்களுக்கு சைவமாக மாறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.

Advertisement