மகளின் ஆடையால் ஏ ஆர் ரஹ்மானை விமர்சித்த வங்கதேச எழுத்தாளர். ரஹ்மான் மகள் கொடுத்த பதிலடி.

0
100219
a-r-rahman
- Advertisement -

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று, 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் நிகழ்ச்சி மும்பையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஹ்மானின் மகள் கதிஜா, ‘கடந்த 10 வருடங்களில் நீங்கள், எங்களுடன் செலவிடும் நேரம் குறைந்துள்ளதே தவிர, உங்களிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை’ என்றுகூறி இருந்தார். ஏ ஆர் ரகுமான் இந்த தெளிவான பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிந்தது. விழா மேடையில் கதிஜா கண்கள் மட்டும் தெரியும் வகையில் பர்தா அணிந்திருந்தார்.

-விளம்பரம்-

The recent conversation of myself on stage with my dad has been doing the rounds. Although, I didn’t expect such an…

Khatija Rahman ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಫೆಬ್ರವರಿ 6, 2019
கடந்த ஆண்டின் பதிவு

இந்த உடை மிகுந்த விவாதப் பொருளாக மாறியது. மேலும், ஏ ஆர் ரஹ்மான் மீதும் விமர்சனங்கள் எழுந்தது. ஏ ஆர் ரஹ்மான் மிகவும் பிற்போக்குவாதியாக நடந்து கொண்டுள்ளார். வெளியில் ஒரு தோற்றமும் உள்ளே வேறு மாதிரியானத் தோற்றமும் கொண்டவராக உள்ளார் என்று பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். அதற்கு பதில் அளித்த ஏ ஆர் ரஹ்மான் மகள் நான் எந்த உடையை அணிய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். எனது தேர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் என் பெற்றோர்கள் பொறுப்பல்ல. விவரம் புரியாமல் தேவையில்லாத முடிவுகளுக்கு வரவேண்டாம் என்று பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

இந்த சம்பவம் நடந்து தற்போது சரியாக 1 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வங்காளதேசத்தை சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விமர்சித்திருந்தார். “எனக்கு ரகுமான் இசை பிடிக்கும். ஆனால் அவரது மகளை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது” என அவர் கூறியுள்ளார். அதற்கு தகுந்த பதில் அடி கொடுக்கும் விதமாக ஏ ஆர் ரஹ்மான் மகள் நீண்ட பதவி ஒன்றை செய்துள்ளார். அதில், இது ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த தலைப்பு மீண்டும்வந்து உள்ளது. இது நாட்டில் இவ்வளவு நடக்கிறது. ஆனால், அனைத்து மக்களும் கவலைப்படுவது ஒரு பெண் அணிய விரும்பும் உடையின் துண்டு.

இந்த ஆண்டின் பதிவு

ஒவ்வொரு முறையும் இந்த தலைப்பு என்னுள் நெருப்பை உண்டாக்குகிறது நான் கடந்த ஒரு வருடத்தில், பல ஆண்டுகளில் நான் காணாத வித்தியாசமான பதிப்பைக் கண்டேன். நான் பலவீனமாக இருக்க மாட்டேன் அல்லது வாழ்க்கையில் நான் செய்த தேர்வுகளுக்கு வருத்தப்பட மாட்டேன். நான் என்ன செய்கிறேன் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன், என்னைப் போலவே என்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நன்றி. எனது பணி பேசும், கடவுள் விருப்பம் . நான் மேலும் சொல்ல விரும்பவில்லை. நான் ஏன் இதைக் கொண்டு வந்து என்னை விளக்கிக் கொள்கிறேன் என்று நீங்கள் நினைப்பவர்களுக்கு, துரதிர்ஷ்டவசமாக அது நடக்கிறது, ஒருவர் தனக்காகவே பேச வேண்டும், அதனால்தான் நான் இதைச் செய்கிறேன். அன்புள்ள தஸ்லிமா நஸ்ரீன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement