ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தன்னுடைய இசை மூலம் உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களை தன்வசப் படுத்தியவர் ஏ.ஆர்.ரகுமான். அவர் தன்னுடைய 25 ஆண்டுகால இசைப்பயணத்தை நிறைவு செய்ததை அடுத்து சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்.

அது சம்மந்தமாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவரிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில் நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகளும் முன்வைக்கப்பட்டது.

Advertisement

சினிமா துறையில் இருந்து ரஜினி கமல் என பலர் அரசியலுக்கு வர காரணம் என்ன என்ற கேள்விக்கு அவர், சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்களுக்குள், ஒரு நல்ல தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கலாம் என்றார்.

ரஜினியின் ஆன்மிக அரசியல் எடுபடுமா என்ற கேள்விக்கு அவர், ரஜினி பேசியதை நான் யூடியூபில் பார்த்தேன், மத சார்பற்ற ஆன்மீக அரசியல் என்று அவர் கூறியிருப்பதன் அர்த்தம் அவருக்கு தான் தெரியும். அவர் நல்லதையே கூறி இருப்பார் என்று நினைக்கிறன் என்றார்.

Advertisement


இதையும் படிக்கலாமே:
டிவி தொகுப்பாளரை கலாய்த்த விஜய் ஏன் தெரியுமா ?

Advertisement

ரஜினிகாந்தின் அரசியல் கட்சிக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்களா என்ற கேள்விக்கு அவர், அதை பற்றி பிறகு பேசுவோம் அதெல்லாம் யோசித்து செய்யவேண்டிய செயல் என்றார்.

Advertisement