ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து குறித்து ஏ.ஆர். ரெய்ஹானா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக பல பிரபலங்கள் விவாகரத்து பெற்று வருகிறார்கள். சமந்தா-நாக சைதன்யா, தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோர் பிரிய இருப்பதாக அறிவித்து இருந்தது பலருக்கும் அதிர்ச்சி தான். அந்த வரிசையில் சமீபத்தில் ஜிவி பிரகாஷ்-சைந்தவி பிரிய இருப்பதாக அறிவித்து இருந்தார்கள் .

கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தது.
ஜிவி பிரகாஷ் குறித்த தகவல்:
இந்த படத்தை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அதன் பின் இவர் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. தற்போது இவர் படங்களில் நடித்தும், இசை அமைத்தும், பாடியும் வருகிறார்

ஜிவி பிரகாஷ்-சைந்தவி திருமணம்:
இதற்கிடையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய நீண்ட காலமாக காதலித்து வந்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்கள். திருமணம் ஆகி 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. சைந்தவியும் பிரபலமான பாடகி ஆவார். திருமணத்திற்கு பின் சைந்தவி கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
ஜிவி பிரகாஷ் பிரிவு:
இப்படி ஒரு நிலையில் திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர். இது பலருக்கும் பேர் அதிர்ச்சி தான். ஆனால், இவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என்று தெரியவில்லை. இதை அடுத்து பலரும் பல வதந்திகளை பரவி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஜிவி பிரகாஷின் தாய் ஏ.ஆர். ரெய்ஹானா பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=Tq99C5_VyQU
ஏ.ஆர். ரெய்ஹானா பேட்டி:
அதில் அவர், விவாகரத்துக்கு சூழ்நிலை என்னவோ, ரொம்ப வருத்தமான விஷயம் தான். வேணும் என்றே யாராவது பிரிவாரா? எல்லோரும் கடைசிவரை சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். சூழ்நிலை அப்படி அமைந்து விடுகிறது. அதற்கு தவிர்க்க முடியாத காரணங்கள் இருக்கலாம். எல்லோருமே சேர்ந்து இருக்கலாம் என்று பிராத்திக்கலாம் என்று கூறியிருக்கிறார்.






