தன்னை அசிங்கப்படுத்தியதை கூட மறந்து பெருந்தன்மையை காட்டிய சமந்தா – பீஸ்ட் நாயகி பூஜாவின் பதில்.

0
609
samantha
- Advertisement -

தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகமூடி’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.

-விளம்பரம்-

இதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. அதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இறுதியாக இவர் அல்லு அர்ஜுனாவுடன் இவர் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற தெலுங்கு படம் வெளிவந்து மெகா ஹிட்டானது.

- Advertisement -

சமந்தா குறித்து பூஜா போட்ட பதிவு :

அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் சமந்தா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருந்தார். அதில் ‘ எனக்கு ஒன்றும் இவர் எந்த விதத்திலும் அழகா தெரியவில்லை’ என்று பதிவிட்டிருந்தார்.நடிகை பூஜா ஹெக்டேவின் இந்த பதிவு சமந்தா ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஆனால், நடிகை பூஜா ஹெக்டே, தனது சமூக வலைதளபக்கம் ஹேக் செய்யப்பட்டது என்று கூறி இருந்தார்.

அதனால் அதில் வரும் பதிவுகளை கண்டு கொள்ளாதீர்கள் என்று பதிவு ஒன்றை செய்திருந்தார். இருப்பினும் சமந்தா மற்றும் பூஜா ஹெட்ஜ்ஜேவின் ரசிகர்கள் மத்தியில் பணிப்போர் நடந்து கொண்டு தான் இருந்தது. இப்படி ஒரு நிலையில் சமந்தா, பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது.

-விளம்பரம்-

சமந்தா வீடியோவிற்கு பூஜாவின் கமன்ட் :

சொல்லப்போனால் பூஜா ஹேக்டே தன் இன்ஸ்டா பக்கத்தில் அரபிக் குத்து ஸ்டெப்ஸ் போட்டு வெளியிட்ட வீடியோவை விட சமந்தாவின் வீடியோ தான் அதிக லைக்ஸ்களை பெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் சமந்தாவின் அரபிக் குத்து வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பூஜா ஹேக்டே ‘Amazee’ என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சமந்தா மற்றும் பூஜா ஹேக்டே இருவருக்கும் இடையிலான பனிப் போர் ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறது.

hbhnjmk

சமந்தாவை பாராட்டும் ரசிகர்கள் :

அதே போல தன்னை விமர்சித்தாலும் அவரது பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்ட சமந்தாவின் பெருந்தன்மையையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் பூஜா ஹேக்டேவிற்கு பதிலாக சமந்தாவையே போட்டு இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். ஏற்கனவே நடிகை சமந்தா, விஜய்யுடன் இணைந்து கத்தி, தெறி, மெர்சல் என்று 3 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement