விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் தான். வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார்.
கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr &Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அறந்தாங்கி நிஷா பேசுகையில் ‘அவருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது எங்கள் யாருக்கும் தெரியாது அவர் ஏதோ உடம்பு சரி இல்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விரைவில் குணமடைந்து வருவார் என்றுதான் நாங்கள் அனைவரும் நம்பினோம்’
ஆனால், அவருக்கு முன்பே இந்த பிரச்சனை இருந்திருக்கிறது Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் அவர் நடனம் ஆடியபோது அவருக்கு மிகவும் மூச்சு வாங்கியது. அப்போதே ராமர் அண்ணா அவருக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று கூறினார். ஆனால் அப்போதும் அவர் ஒன்றும் சொல்லவில்லை. மேலும் விஜய் தொலைக் காட்சியில் வேலை செய்தால் லட்சக்கணக்கில் சம்பாதிப்பார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி எல்லாம் கிடையாது நாங்களும் உழைத்தால் தான் காசு.
ஆனால் இந்த நான்கு மாதமாக எங்கள் யாருக்கும் வேலை கிடையாது. அந்த மன அழுத்தமாக கூட அவருக்கு இப்படி ஆகியிருக்கலாம். எஸ்பிபி சாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவருக்கு பாடல்களை ஒலிக்க வைத்தார்களாம். எஸ்பிபி சாருக்கு எப்படி பாடல்கள் பிடிக்குமோ அப்படி பாலாஜி அண்ணனுக்கு காமெடி தான் மிகவும் பிடிக்கும். தினமும் ஒரு பத்து பேர் சென்று அவரை சிரிக்க வைத்து உங்களுக்கு ஒன்றும் ஆகாது விரைவில் திரும்பி வந்து விடுவீர்கள் என்று தைரியம் சொல்லி இருந்தாள் அவர் என்று சரியாக இருந்து இருப்பாரோ என்னவோ என்று கூறியிருக்கிறார் நிஷா.