கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி ஒட்டுமொத்த உலகையும் ஆட்டி படைத்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தற்போது இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33000 தாண்டியது மற்றும் பலியாகும் எண்ணிக்கையும் 1000க்கு மேல் தாண்டியது. இதனால் ஊரடங்கு உத்தரவை இன்னும் நீட்டிப்பதாக பேசப்பட்டு வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு கவலையில் உள்ளார்கள்.
மேலும், ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தான் வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதனால் பிரபலங்கள் கொரோனா வைரஸ் குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிரந்து வருகிறார்கள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்கு பல்வேறு வேலைகளை செய்து வீடியோக்களாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை பிரகதி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகாசன போஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை பிரகதி அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார்.
தற்போது இவர் கொரன்டைன் நேரத்தை தன் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை பிரகதி அவர்கள் வீட்டில் இருந்த படியே தான் செய்து வரும் சுவாரஸ்யமான விஷயங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நடிகை பிரகதி தற்போது கடினமான யோகாசனங்களை செய்து உள்ளார். அப்படி கடினமான யோகாசனங்களை செய்யும் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் உடலை சரியான சீராக வைத்திருக்கிறீர்கள் என்றும், இந்த யோகாசனம் புகைப்படங்களை உங்களிடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், வயசானலும் உங்கள் எனர்ஜி இன்னும் உங்களை விட்டு போகவில்லை என்றும் பல கமெண்டுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகை பிரகதி அவர்கள் தன்னுடைய மகனுடன் சேர்ந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம குத்து டான்ஸ் ஆடியுள்ளார்.
இந்த பாடலுக்கு நடிகை பிரகதி ஒரு குட்டி டவுசரை போட்டுக் கொண்டு வெறித்தனமாக குத்தாட்டம் ஆடி உள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் 1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தில் நடிகை பிரகதி நடித்திருந்தார். இதை தொடர்ந்து தமிழில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் அதிகம் தெலுங்கு மொழிப் படங்களில் தான் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அரண்மனைக்கிளி என்ற தொடரில் நடித்து வருகிறார்.