அரண்மனை கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா – வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டார்.

0
872
jaanu
- Advertisement -

இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-
Aranmanai Kili

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால், நடிகர் கருணாஸ், நடிகை நிக்கி கல்ராணி, பாடகர் எஸ் பி பி போன்ற பலர் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகினர். சமீபத்தில் கூட வசந்த் அன் கோ நிறுவனர் வசந்த குமார் கொரோனா தொற்றால் காலமானார். மேலும், சின்னத்திரை நடிகை நவ்யா சாமி கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார்.

இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மோனிஷாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனைக்கிளி’ தொடரும் ரசிகர்களின் பேவரைட் தொடர்களில் ஒன்றாக திகழ்ந்துவந்தது.

-விளம்பரம்-

கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கிய இந்த தொடர் கடந்த மார்ச் மாதம் திடீரென்று நிறுத்தப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் ஜானுவாக நடித்து வந்த மோனிஷாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டு தனிமையில் இருந்து வருகிறாராம். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement