மணிமேகலை-பிரியங்கா விவகாரம் குறித்து அறந்தாங்கி நிஷா அளித்து இருக்கும் பேட்டி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாவே மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை செய்தி தான் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி 5’ நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகி இருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். ஆங்கர் பார்ட்டில் எல்லாம் அவர் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார்.
மணிமேகலை-பிரியங்கா விவகாரம்:
இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் , பிரியங்காவை மோசமாக விமர்சித்தும், திட்டியும் வருகிறார்கள். ஆனால், சிலர் ப்ரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசி இருந்தார்கள். அந்த வகையில் குரேஷி, நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்றும், பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி வீடியோ போட்டு இருந்தார்.
தொடர்ந்த சர்ச்சைகள்:
அதே போல் பாவனி, டிஜே பிளாக், சூப்பர் சிங்கர் பூஜா, சுனிதா ஆகியோர் பிரியங்காவிற்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை பேசி இருந்தார்கள். மேலும், பிரியங்காவுக்கு ஆதரவாக பேசியவர்களை தாக்கி சமீபத்தில் மணிமேகலை தன் கணவருடன் சேர்ந்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் அவர், சொம்புக்கு எல்லாம் என்ன மரியாதை என்றவாறு பேசியிருந்தார். இது மிக பெரிய அளவில் பேசப்பட்டது. பலரும் மணிமேகலை கருத்து தவறு என்பது போல கமெண்ட் போட்டு இருந்தார்கள்.
அறந்தாங்கி நிஷா பேட்டி:
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில் அறந்தாங்கி நிஷா, உண்மையிலேயே அவர்களுக்குள் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. அந்த இடத்திலும் நான் இல்லை. இதை பற்றி நான் மணிமேகலை, பிரியங்கா விடம் பேசவில்லை. அதனால் விவரம் தெரியாமல் நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், ஒரு பெண்ணாக இந்த இடத்தில் ஒரு கருத்தை மட்டும் தெரிவித்துக் கொள்ள இருக்கிறேன்.
மணிமேகலை-பிரியங்கா குறித்து சொன்னது:
எப்போதுமே நான் பெண்களுக்காக குரல் கொடுத்து பதிவு போடுவேன். அந்த வகையில் ஒரு பெண்ணாக மட்டும் தான் இதை நான் சொல்கிறேன். எனக்கு நிறைய பேர் மேல் ரொம்ப வருத்தம். காரணம், ஒருவர் தொழில் சார்ந்த குறை சொல்லி இருந்தால் அந்த தொழிலைப் பற்றி மட்டும் கமெண்ட் போடுங்க. தேவையில்லாமல் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அவருடைய கேரக்டரை குறித்தும் பேச தேவை இல்லை. ரொம்ப ஒரு பெண்ணை இழிவு படுத்தி எதுவும் போடாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.