திடீரென அறந்தாங்கி நிஷா பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவன் சத்துணவு பணியாளர் இடம் முட்டை கேட்டதற்கு, அவர்கள் இல்லை என்று மறுத்து இருக்கிறார்கள். உடனே அந்த மாணவன், முட்டை இருக்கும் போது ஏன் கொடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் அந்த சத்துணவு பணியாளர், துடைப்பதால் விரட்டி விரட்டி அந்த மாணவனை அடித்திருக்கிறார்கள்.
View this post on Instagram
இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் அங்கிருந்த யாரோ பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து பலருமே சத்துணவு பணியாளரின் செயலை கண்டித்தும் திட்டியும் வருகிறார்கள். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த சத்துணவு பணியாளரை பணிநீக்கம் செய்து இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தான் கோபத்தில் அறந்தாங்கி நிஷா வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
அறந்தாங்கி நிஷா வீடியோ:
அதில் அவர், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி சத்துணவு முட்டை கேட்டதற்கு 5 ம் வகுப்பு மாணவன் சமையல் செய்பவர்காலால் தக்கப்பட்டது மிகவும் கன்னடனதிற்குரியது. ஆசிரியர்கள் அடிப்பது மாணவன் நல்வழிக்காக, இவர்கள் எப்படி மாணவன் மீது கைவைக்க முடியும். யார் கொடுத்த உரிமை, மரியாதைக்குரிய பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் அந்த பணியாளரை பணி நீக்கம் மட்டும் அல்ல உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அறந்தாங்கி நிஷா குறித்த தகவல்:
சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென்ன ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்து கொண்டு பிரபலமானவர். தன்னுடைய நகைச்சுவை பேச்சால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் 4ல் நிஷா:
இவர் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வெறுப்பு தான் கிடைத்தது. இதை அடுத்து நிஷா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

நிஷா வாங்கிய வீடு:
அதோடு இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தான் இவர் சென்னையில் தான் வீடு வாங்கி இருக்கிறார். காரணம், இவர் வேலைக்காக சென்னை வந்த போது வாடகை வீடு தேடி அலைந்து இருந்தார். அப்போது சினிமாவில் இருப்பவர்களுக்கெல்லாம் வீடு தர முடியாது,முஸ்லிம் என்றாலே வீடு தர மாட்டோம் என்றும் கூறியிருக்கிறார்களாம். அதனாலே போராடி நிஷா சென்னையில் வீடு வாங்கி இருக்கிறார்.






