கடந்த சில வாரங்களாகவே விஜய் டிவியின் பஞ்சாயத்து குறித்து செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக, மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை தான் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த ‘குக் வித் கோமாளி 5’ நிகழ்ச்சி நேற்று தான் முடிவடைந்தது. இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகி இருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார்.
மணிமேகலை-பிரியங்கா விவகாரம்:
இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் , பிரியங்காவை மோசமாக விமர்சித்தும், திட்டியும் வருகிறார்கள். ஆனால், சிலர் ப்ரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசி இருந்தார்கள். மேலும், பிரியங்காவுக்கு ஆதரவாக பேசியவர்களை தாக்கி மணிமேகலை தன் கணவருடன் சேர்ந்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.

நிஷா கருத்து:
பின் இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில் அறந்தாங்கி நிஷா, உண்மையிலேயே அவர்களுக்குள் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. எப்போதுமே நான் பெண்களுக்காக குரல் கொடுத்து பதிவு போடுவேன். அந்த வகையில் ஒரு பெண்ணாக மட்டும் தான் இதை நான் சொல்கிறேன். ஒருவர் தொழில் சார்ந்த குறை சொல்லி இருந்தால் அந்த தொழிலைப் பற்றி மட்டும் கமெண்ட் போடுங்க. தேவையில்லாமல் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அவருடைய கேரக்டரை குறித்தும் பேச தேவை இல்லை என்று கூறியிருந்தார்.
விஜய் டிவியை விட்டு விலகும் நிஷா:
இப்படிநாளுக்கு நாள் இந்த விவகாரம் பூதாகரமாக சென்று கொண்டு இருக்கிறது. இதை பார்த்த பலருமே விஜய் டிவிக்குள் இவ்வளவு பாலிடிக்ஸ், இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் டிவியில் இருந்து அறந்தாங்கி நிஷா வெளியேறிவிட்டார் என்ற தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
View this post on Instagram
அறந்தாங்கி நிஷா பதிவு:
இது குறித்து அறந்தாங்கி நிஷா விளக்கமளித்து பதிவு போட்டு இருக்கிறார். அதில் அவர், இந்த செய்தி முற்றிலுமே வதந்தி. யார் பார்த்த வேலை சாமி இது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தேன் டா, உங்களால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்டு இருக்கீங்க என்று கூறியிருக்கிறார். தற்போது அறந்தாங்கி நிஷாவின் பதிவு தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.






