இதை விட ஒரு அம்மாவுக்கு என்ன பெருமை இருக்க முடியும் ? தன் மகள் படிக்கும் பள்ளியில் நிஷாவிற்கு கிடைத்த கெளரவம்.

0
384
Nisha
- Advertisement -

கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பின் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் ரன்னர் அப் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. பின் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் நிஷா கலந்து கொண்டிருந்தார். இவரை மற்றவர்கள் எவ்வளவு கலாய்த்தாலும், அசிங்கப்படுத்தினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பவர்.

-விளம்பரம்-

இதனாலே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் எம்பிஏ படித்து முடித்துள்ளார். அழகாய் இருக்கிறவர்கள் ஜெயிச்சதைவிட வாழ்க்கையில் அசிங்கம், அவமானம் பட்டவர்கள் தான் ஜெயித்தது அதிகம் என்பதை நிரூபித்து காண்பித்தவர். நிஷாவின் கணவர் பெயர் ரியாஸ். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.

- Advertisement -

மீடியா துறைக்கு வருவதற்கு முன் இவர் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக 13 ஆண்டுகள் இருந்து உள்ளார்.தற்போது இவர் கருப்பு ரோஜா என்று ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார். அதில் பல வகையான காமெடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரின் சேனலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வழக்கம்போல் நிஷா விஜய் டிவியில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார் விட்டார்

சமீபத்தில் கூட நிஷா புதிதாக வீடு ஒன்றை கட்டி இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். அதே போல நிஷா பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்திரனாக சென்றுவருகிறார். இப்படி ஒரு நிலையில் தனது மகள் படிக்கும் பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக சென்று இருப்பது குறித்து நிஷா உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘இந்த வருடம் நிறைய பள்ளிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக போய்கிட்டே இருந்தேன்.

-விளம்பரம்-

திடீர்னு ஒரு அழைப்பு அறந்தாங்கியில் என்னோட பொண்ணு படிக்கிற பள்ளியில Eurokids சிறப்பு அழைப்பாளரா நீங்க வரணும்னு கூப்பிட்டாங்க, ரொம்ப சந்தோஷமா இருந்தது நான் மட்டும் இல்ல என்னுடைய கணவரும் சிறப்பு அழைப்பாளரா அழைச்சிருந்தாங்க. இதுவரைக்கும் பள்ளியில நான் எந்த பரிசு வாங்கினதே கிடையாது. ஆனால் நிறைய பள்ளிகளுக்கு பரிசு கொடுப்பதற்கு இப்ப நான் போய்கிட்டு இருக்கேன்.

அந்த வகையில என் பொண்ணு என் கையால பரிசு வாங்கும் போது தனி சந்தோஷமாக இருந்தது. என்னையும் என் கணவரையும் என் குடும்பத்தையும் கௌரவப்படுத்திய என் மண்ணிற்கும், Eurokids பள்ளிக்கும் சகோதரி கவிதா சரவணனுக்கும் நன்றி’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். நிஷாவின் இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருவதோடுன் நிஷாவின் வளர்ச்சியை மனமார பாராட்டியும் வருகின்றனர்.

Advertisement