அச்சு அசலாக வடிவேலு பாலாஜி போல் நாய் சேகர் லுக்கில் அறந்தாங்கி நிஷா – புகைப்படத்தை பதிவிட்டு உருக்கம்.

0
610
nisha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவருடைய நகைச்சுவைப் பேச்சும், பாடி லேங்குவேஜும் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது. அதோடு நிஷா அவர்கள் சின்னத்திரை நயன்தாரா என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு இருக்கிறார். இவரை மற்றவர்கள் எவ்வளவு கலாய்த்தாலும், அசிங்கப்படுத்தினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பவர். இதனாலே இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிஷா போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார்.

-விளம்பரம்-
vadivel-balaji-nisha

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்றார். இருந்தாலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் நிஷா பங்கு பெற்று வருகிறார். இவர் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அறந்தாங்கி நிஷா அவர்கள் மறைந்த நடிகர் வடிவேலு பாலாஜி கெட்டப்பை போட்டுள்ள புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சியின் செல்ல பிள்ளையாக இருந்தவர் மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி. இவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவருடைய இழப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை தந்தது.

- Advertisement -

இந்த நிலையில் அறந்தாங்கி நிஷா அவர்கள் மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி போல கெட்டப் போட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அந்த போட்டோவில் நிஷா அச்சு அசல் வடிவேல் பாலாஜி போலவே இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வடிவேல் பாலாஜியை மறக்க முடியாமல் கண் கலங்கி தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள். இந்நிலையில் அறந்தாங்கி நிஷா அவர்கள் இதுகுறித்து கூறியிருப்பது, நான் வடிவேலு பாலாஜி கெட்டப்பை போட்டிருப்பதை செட்டில் எல்லோரும் பார்த்து சந்தோசப்பட்டார்கள். இருந்தாலும் பாலாஜி அண்ணாவை நாங்கள் எல்லோரும் மிஸ் பண்ணுகிறோம்.

அவர் இல்லாதது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. மக்களை சந்தோஷப்படுத்துவது மட்டும் தான் நம்முடைய வேலை. அது எப்போதும் நாங்கள் செய்து கொண்டே இருப்போம். பாலாஜி அண்ணாவின் நினைவுகளுடனும், அவருடைய ஆசீர்வாதத்துடனும் நாங்கள் மக்களை சிரிக்க வைப்போம். வடிவேல் பாலாஜி அண்ணா என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்று கூறி உள்ளார். தற்போது நிஷா பதிவிட்ட கருத்தும், புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement