அரசன் சோப்! ரொம்ப, ரொம்ப நல்ல சோப். இந்த வசனங்கள் தற்போது வரை காதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த குட்டி பெண்ணின் பெயர் அய்ரா. அந்த குட்டி பெண் தற்போது ஒரு மாடலாக இருந்து வருகிறார்.மேலும், இந்த குட்டிப்பெண் வளரவதற்குள் 300 விளம்பர படங்களில் நடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே தமன்னா, ஹன்சிகா போன்ற நடிக்களுடன் சேர்ந்த விளம்பர படங்களில் நடித்துள்ளார். அவ்வளவு ஏன் தெறி படத்தில் கூட நடித்துள்ளார் என்பது தான் ஆச்சரியமே.
இந்த படத்தில் இவர் பல்லவி ராதாகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு இவர் சகா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் வெளிவந்த யாயும் பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்த பாடலை 15 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்து உள்ளார்கள்.
இதையும் பாருங்க : ‘நடிகை, குக், ஜட்ஜ்’ இப்போ விமர்சகராக அவதாரம் எடுத்த வனிதா. பொன்மகள் வந்தாள் பற்றி என்ன சொல்லியுள்ளார் பாருங்க.
இந்த ஒரு பாடல் மூலம் இவர் பிரபலமானர். அதனைத் தொடர்ந்து இவர் நுங்கம்பாக்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் கேர் ஆஃப் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஹேமம் பார் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் வெற்றி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை ராஜசேகர், ஜீவன் கார்த்திகேயன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஸ்வீகேர் அகஸ்தி இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் தீபன், வெற்றி, மும்தாஸ், அயரா, கார்த்திக் ரத்னம், சோனியா கிரி, நிஷேஷ், ஸ்வேதா நடிக்கிறார்கள். மேலும், பசங்க 2 படத்தில் நடித்த நிஷேஷ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியானது. காதலை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை நடிகர் கார்த்தி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த படத்தின் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.