மலேசிய அஜித் கிளப்பில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்.! தீவிர ரசிகராம்.!

0
424
Ajith

அல்டிமேட் ஸ்டார் அஜித் தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு திரைப் பிரபலங்கள் கூட ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் ஆரவ் மலேசியாவில் உள்ள அஜித் ரசிகர் மன்றத்தில் சேர்ந்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் ஆரவ்.

பிக் பாஸ் பிரபலங்களான நடிகை ஆர்த்தி மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் இருவருமே அஜித்தின் தீவிர ரசிகர் என்பது பலரும் அறிந்த ஒன்றே. ஆனால் , அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆரவ்வும் அஜித்தின் இவ்வளவு வெறித்தனமான ரசிகர் என்பது பலருக்கும் தற்போது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்க : தீடீரென்று முடிந்த மானஸா மற்றும் சஞ்சீவ் நிட்சதார்த்தம்.! வெளியான புகைப்படம்.! 

- Advertisement -

நடிகர் ஆரவ் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது நரேஷ் சம்பத் என்பவர் இயக்கத்தில் ‘ராஜ பீமா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹாஷிமா நர்வால் என்பவர் நடித்திருக்கிறார்.

மேலும், இந்த படத்தில் ஓவியா மற்றும் யாஷிகா ஆனந்த் போன்றவர்கள் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நீண்ட மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement