-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

துபாய் 24H கார் ரேஸ் : இது அஜித் சாரோட கனவு – நெகிழ்ச்சியில் ஆரவ் சொன்ன தகவல்

0
46

அஜித் கார் ரேஸ் குறித்து நடிகர் ஆரவ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. மேலும், இவர் நடிப்பை தாண்டி கார் ரேஸிங் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். இது அனைவருக்குமே தெரியும்.

-விளம்பரம்-

இவர் சினிமாவில் நுழையும்போது இருந்தே கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும், இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். தற்போது ’24H’ கார்பந்தயம் துபாயில் நடக்கிறது. இதில் அஜித் குமாருடைய டீமுமே களம் இறங்கி இருக்கிறது.

அஜித்குமார் ரேசிங் டீம்:

கடந்த ஆண்டு ‘அஜித்குமார் ரேசிங் டீம்’ என்ற குழுவை அஜித் உருவாக்கி ரேஸிங்க்கு தேவையான அனைத்தையுமே செய்து வந்திருந்தார். தற்போது அந்த குழு உடனே கார் பந்தயத்திலும் அஜித் களம் இறங்கி இருக்கிறார். இந்த குழுவில் நடிகரும், விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவருமான ஆரவும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஆரவ், இந்த கார் பந்தயத்தை பார்க்கும்போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.

ஆரவ் பேட்டி:

-விளம்பரம்-

இந்த ரேஸ் அஜித் சாரின் கனவு. அஜித் சார் இந்த ரேஸுக்காக திட்டமிட்டதில் இருந்து இப்போது வரையுமே நாங்கள் அவருடன் இருந்திருக்கிறோம். இது சாருக்கு எப்படிப்பட்ட கனவு என்று எங்களுக்கு தெரியும். அதில் நாங்களும் பயணத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு பின்னாடி அஜித் சாரோட ஆறு மாத கடின உழைப்பு இருக்கிறது. அதனால் தான் இந்த நாள் அஜித் சாருக்கும், எங்களுக்கும், மொத்த அஜித்குமார் ரேசிங் டீமுக்கும் ரொம்ப முக்கியமானது. எனக்கும் அஜித் சாருக்கும் ஆட்டோ மொபைல் ரொம்ப பிடிக்கும். அதனால் எங்களுக்கு சினிமாவை தாண்டி இந்த மாதிரியான விஷயங்கள் பேசுவதற்கு அதிகமாக இருக்கும்.

-விளம்பரம்-

அஜித் கார் ரேஸ் பற்றி சொன்னது:

எனக்கும் பைக் ரேஸில் கலந்துக்கணும் என்று ரொம்ப நாள் ஆசை இருந்தது. ஆனால், சினிமாவுக்கு வந்ததுக்கு பிறகு உடலும் முகமும் ரொம்பவே முக்கியம். பைக் ரேஸ் இல்லையானாலும் கார் ரேஸில் கலந்துக்கணும் என்று ஆசை இருக்கு. அடுத்த மூன்று வருடத்தில் நானும் இந்த மாதிரி ரேசில் கலந்து கொள்வேன் என்று உற்சாகத்தில் கூறியிருக்கிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளிவந்த துணிவு படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது. தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருக்கிறார்.

அஜித் திரைப்பயணம்:

இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ஆரவ், உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்தது. தற்போது இந்த படத்தினுடைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இதை அடுத்து அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று கொண்டு வருகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news