ஒரே ஒரு டீவீட்டால் அரவிந்த் சாமி திட்டி தீர்த்து வரும் விஜய் ரசிகர்கள் – ஏன் தெரியுமா ?

0
1231
- Advertisement -

நடிகர் அரவிந்த் சாமி போட்ட ஒற்றை டீவீட்டால் விஜய் ரசிகர்கள் பலரும் நடிகர் அரவிந்த் சாமியை திட்டி தீர்த்து வருகின்றனர். கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது.ஆனால், மாஸ்டர் போன்ற பெரிய திரைப்படத்தை Ott யில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதாலும் ரசிகர்களும் இதை ஏற்க மாட்டார்கள் என்றும் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது இருப்பினும் கொரோனா பிரச்சினை காரணமாக திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுஇருந்தது .

-விளம்பரம்-

பல கோடிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வெறும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டால் வசூலில் நிச்சயம் துண்டு விழும் என்று பலரும் கருதினர்.இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய்கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து திரையரங்குகளில் தற்போது 50 சதவீதமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதை, 100 சதவீதமாக மாற்ற வேண்டி அவர் கோரிக்கை வைத்தாகவும் தகவல்கள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து பேசினார்.

இதையும் பாருங்க : குக்கு வித் கோமாளி செட்டில் சிவகார்த்திகேயன் – ஷிவாங்கி போல செய்த மிமிக்ரி. வீடியோ இதோ.

- Advertisement -

அதில் அவர் கூறியதாவது: “நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை. ஏகப்பட்ட படங்கள் ரிலீசாகாமல் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுத்துருக்காங்க. நிறைய பேருக்கு நஷ்டம் ஆகிட்டு இருக்கு. அந்த எல்லா படத்தையும் கருத்தில் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என விஜய் கேட்டுக்கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். தன்னுடைய படத்தை பற்றி மட்டும் யோசிக்காமல் நடிகர் விஜய் மற்றவர்களை பற்றியும் யோசித்துள்ளது பலரின் பாராட்டுகளை பெற்றது.

இப்படி ஒரு நிலையில் திரையரங்குகல் 100% பார்வையாளர்களுடன் இயங்க அராசானை வெளியாகி இருந்தது. அதில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் குறைந்து வருவதாகவும் இதனால் திரையரங்குகளில் கொடுக்கப்பட்டு இருந்த 50 % இருக்கை அனுமதியை 100%மாக மாற்ற கோரி திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் சார்பாக கேட்டுக்கொண்டதன்படி, ஏற்கனவே 50 % மாக இருந்த தியேட்டர் அனுமதி இனிமேல் 100% இருக்கையுடன் இயங்கலாம் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த அறிவிப்பால் திரையுலகினர் மட்டுமல்லாது மாஸ்டர் படத்தை எதிர்நோக்கி காத்திருந்த விஜய் ரசிகர்களும் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். மேலும், இந்த அறிவிப்பை கேட்டு பல்வேறு நடிகர் நடிகைகளும் சமூக வலைதளத்தில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்த நிலையில் நடிகர் அரவிந்த் சாமி ‘ “50 சதவிகிதம் என்பது சில நேரங்களில் 100 சதவிகிதத்தை விட சிறப்பாக இருக்கும். அதில் இதுவும் ஒன்று” என ட்வீட் செய்து இருந்தார். அரவிந்த் சாமியின் இந்தப் பதிவைக் கண்டு அதிருப்தியடைந்த விஜய் ரசிகர்கள், நடிகர் அரவிந்த் சாமியைக் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். 

Advertisement