இன்று அரவிந்த் சாமியின் 51வது பிறந்தநாள் – குண்டாக இருந்த போது இலங்கையில் மகள் முன்பே அவர் பட்ட அவமானம்.

0
11067
aravind
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரசாந்த், அப்பாஸ், மாதவன் என்று எத்தனையோ நடிகர்கள் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்தை பெற்றாலும் இதற்கு பொருத்தமான முதல் ஆள் யார் என்றால் அது அரவிந்த் சாமி தான். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அரவிந்த்சாமி. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர், அதன்பின்னர் பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். சாக்லேட் பாய் தோற்றத்தினால் இவரால் சினிமாவில் ஹீரோவாக தொடர்ந்து நிற்க முடியவில்லை. பின்னர் சில ஆண்டுகள் கழித்து சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்சை துவங்கினார்.

-விளம்பரம்-
Arvind Swamy Family Photos With Wife, Daughter, Son & Friends - YouTube

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் இவர் நடித்த பல்வேறு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக தனி ஒருவன், செக்கசிவந்தவானம் போன்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும், இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றினார் அரவிந்த்சாமி.

- Advertisement -

ரவிந்த்சாமிக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர் அதில் முதல் மனைவியை 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தற்போது 51 வயதாகும் அரவிந்த் சாமி இந்த காலகட்டத்திலும் பல ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

Here's The Actual Reason Why Arvind Swamy Decided To Step Out Of The Filmy  Limelight! - Chai Bisket

தான் குண்டாக இருக்கும் போது தனது மகள் முன்னாள் யாரென்று தெரியாத ஒரு நபரால் கிண்டலுக்கு உள்ளானேன் என்று அரவிந் சாமி பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அதில், நான் ஒரு சமயம் எனது மகளுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது நான் மிகவும் குண்டாக இருந்தேன். ஒரு நாள் ஒரு உணவகத்தில் என்னுடைய மகளுடன் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் மகளிடம்’உன் அப்பாவை கம்மியாக சாப்பிட சொல்லு’ என்று கூறினார். அவர் அப்படி கூறியது எனக்கு ஓன்றும் பெரிதாக தெரிவில்லை. ஆனால், சின்ன பெண்ணாக இருந்த என் மகளுக்கு எப்படி இருந்திருக்கும். அதெல்லாம் என்னால் மறக்கவே முடியாது என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

Advertisement