கட்டுமஸ்தாக இருந்த அரவிந்த் சாமியா இப்படி மாறிட்டார் பாருங்க. காரணம் இது தானாம்.

0
77249
aravind-swamy
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அரவிந்த்சாமி. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர், அதன்பின்னர் பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். சாக்லேட் பாய் தோற்றத்தினால் இவரால் சினிமாவில் ஹீரோவாக தொடர்ந்து நிற்க முடியவில்லை. பின்னர் சில ஆண்டுகள் கழித்து சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்சை துவங்கினார்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் இவர் நடித்த பல்வேறு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக தனி ஒருவன், செக்கசிவந்தவானம் போன்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும், இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றினார் அரவிந்த்சாமி. இந்தநிலையில் தலைவி படத்திற்காக எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி மீண்டும் கெட்டப்பை மாற்றி உள்ளார்.

இதையும் பாருங்க : படு மோசமான உடையில் போஸ் கொடுத்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை.

கடந்த சில காலமாகவே சினிமாவில் அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று முக்கியமான நபர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க சில இயக்குனர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது அந்த படத்திற்கான பணிகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-
Image result for arvind swamy six pack"

Image

முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற படம் உருவாகி வருகிறது. ஏ எல் விஜய் இயக்கி வரும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணவ்த் நடிக்கிறார். இவர், தமிழில் ஜெயம் ரவி நடித்ததாம் தூம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கும் எம் ஆர் ராதாவிற்க்கும் மோதல் ஏற்பட்டபோது எம் ஜி ஆரை எம், ஆர் ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த சம்பவங்களை வைத்து இந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

மேலும், இந்த படத்திற்காக நடிகை கங்கனா தமிழ் மொழியை கூட கற்று வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் எம் ஜி ஆர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சற்று உடல் எடையை ககூட்டியுள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. மேலும், இந்த படத்திற்காக கிளீன் ஷேவ் செய்து கொழுக் முழுக் தோற்றத்தில் மாறியுள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. சமீபத்தில் அரவிந்த் சாமியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement