பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா போட்டு இருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று 59 வது நாள். இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, சிவகுமார் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். இதற்கிடையே, பிக் பாஸ் 8 போட்டியாளர் அருண் பிரசாத்துக்கு ஆதரவாக , கடந்த சீசன் டைட்டில் வின்னரான அர்ச்சனா பதிவுகளை போட்டுக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட அர்ச்சனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பிக் பாஸ் வீட்டில் இருந்து அருண் பிரசாத் பேசி இருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. அதற்கு அர்ச்சனா, நன்றி சொல்லி அருண் பேசிய வீடியோவை ஷேர் செய்து இருந்தார்.
அர்ச்சனா மற்றும் அருண் காதல்:
அதோடு கடந்து வந்த பாதை டாஸ்க்கில் கூட, அருண்பிரசாத் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறியிருந்தார். இதன் மூலம் அர்ச்சனா- அருண் காதலிப்பது உறுதியாகி இருந்தது. இதை அடுத்து பிக் பாஸ் வீட்டில் அருண் செய்யும் சில விஷயங்களுக்காக இணையவாசிகள் அர்ச்சனாவை திட்டி பதிவிட்டு வந்தார்கள். இதனால் கடந்த வாரம் அர்ச்சனா இது குறித்து பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில், ‘ என் வாழ்க்கையில் நான் இந்த இடத்திற்கு வர ஒவ்வொரு அடியிலும் பெரும் சவால்கள், விமர்சனங்கள், எண்ணற்ற தியாகங்களை சந்தித்து இருக்கிறேன்.
அர்ச்சனா கொடுத்த பதில்:
பிரசாந்தும் நானும் வெவ்வேறு விருப்பங்களை கொண்ட இரண்டு தனித்தனி நபர்கள். எனக்கு இருக்கும் மற்ற நண்பர்களைப் போலவே நான் அவரை ஆதரிக்கிறேன். ஆனால், அவருடைய செயல்களுக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்பது போல் பதிவு செய்திருந்தார். உடனே நெட்டிசன்கள், இவர்கள் இருவரும் பிரேக்கப் செய்து பிரியப் போகிறார்களா என்பது போல் பேசி வந்தார்கள். அதற்கு அர்ச்சனா, ‘அருண் தான் என் உலகம். நான் அவரை எதிர்த்து எந்த ஒரு பதிவையும் போடவில்லை. எங்கள் உறவில் எந்த ஒரு விரிசலும் இல்லை. உலகமே அவரை எதிர்த்து நின்றாலும் அவருக்கு துணையாக நான் என்றுமே நிற்பேன் என்று கூறி இருந்தார்.
Life is just like cricket, you can cheer for your favorite team even if you’ve played in the last game. For this, I’ve received rape and acid attack threats. This screenshot is just one example—my DMs are filled with filthy, disgusting messages. This is beyond hurtful and way… pic.twitter.com/gmdxYFjA5T
— Archana Ravichandran (@Archana_ravi_) December 3, 2024
அர்ச்சனா பதிவு:
இந்த நிலையில் முத்துக்குமாரின் ரசிகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை அர்ச்சனா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், வாழ்க்கை என்பது கிரிக்கெட் போன்றது. தங்களுக்கு பிடித்த அணி கடைசி போட்டி விளையாடினாலுமே அவர்களுக்கு ஆதரவளிப்பது தவறு கிடையாது. எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றது. ஆசிட் வீசுவோம் என்றெல்லாம் மிரட்டுகிறார்கள். நான் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட் ஒரு சின்ன எக்ஸாம்பிள் தான். எனக்கு இதுபோன்று நிறைய மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றது. இது எல்லை மீறிய தவறான செயல். தவறான தகவல்களை பரப்புபவர்கள் கவனத்திற்கு நான் சம்பந்தப்பட்ட பக்கங்கள் மீதும் அதன் அட்மின்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இதற்கு பலரும் அர்ச்சனாவிற்கு ஆதரவாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.