நான் Bully பண்றதுக்கு எதிரான ஆள், சீனியாரிட்டி வச்சி இப்படி பண்றது – VJ அர்ச்சனா கருத்து

0
252
- Advertisement -

பிரியங்கா- மணிமேகலை விவகாரம் தொடர்பாக விஜே அர்ச்சனா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை நிகழ்ச்சியில் தாமுவுடன் மற்றொரு நடுவராக மாதம்ப்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார்கள். மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து குறைவான மதிப்பெண்களை பெற்று ஸ்ரீகாந்த் தேவா, வசந்த், ஜோயா, பூஜா, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ் ஆகியோர் வெளியேற்றி இருந்தார்கள். இந்த வாரம் செமி பைனல் நடைபெற இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகியதாக போட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி 5:

இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி இனி நான் இல்லை. நான் ரொம்ப நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், எப்போதும் என்னுடைய 100% முயற்சியையும், கடின உழைப்பையும் கொடுத்தேன். 2019 இல் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கிறேன். ஆனால், சுயமரியாதையை விட முக்கியமானது எதுவுமே கிடையாது. என்னுடைய வாழ்க்கையின் எல்லா நேரத்திலும் நான் அதை கண்டிப்பாக பின்பற்றி வருகிறேன். புகழ், பணம், தொழில் வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுயமரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம் தான்.

மணிமேகலை பதிவு:

அதனால் தான் நான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். குறிப்பாக, அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். ஆனால், அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் ஆங்கர் பகுதிகளில் நிறைய குறுக்கிடுகிறார்.
இதற்கு முன்பு போல் இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இல்லை. அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை. இது போன்று என்னை யாரும் நடத்தியது கிடையாது என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

பிரபலங்கள் கருத்து:

இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான். இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியில் விஜே அர்ச்சனாவிடம் தொகுப்பாளர் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அர்ச்சனா, நான் சூட்டிங் போவேன். என்னுடைய வேலை முடித்த உடனே வந்து விடுவேன். பிரியங்கா, மணிமேகலை இரண்டு பேருமே எனக்கு தெரியும். மற்றபடி அவர்களுடன் பர்சனலாக நான் பழகியது கிடையாது.

அர்ச்சனா பேட்டி:

அதனால் அவர்களுக்குள் என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் சொல்ல முடியாது. அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். நான் எப்போதுமே bullyக்கு எதிராக தான் இருப்பேன். என்னுடைய அனுபவத்தில் தான் இதை சொல்கிறேன். சீனியர், ஜூனியர் என்றெல்லாம் நடத்தக்கூடாது. பொதுவாகவே சீனியராக, ஒரு சேனலில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை குறை சொல்வதும் டாமினோட் செய்வதும் ரொம்ப தவறு. இதை நான் பொதுவாகத்தான் சொல்கிறேன். மற்றபடி மணிமேகலை, பிரியங்கா விஷயத்தில் நான் கருத்து சொல்ல முடியாது என்று கூறி இருக்கிறார்.

Advertisement