பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர் அருண் பிரசாத் குறித்து, பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா போட்டிருக்கும் எமோஷனல் பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று 53வது நாள். இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சந்திரசேகர், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
முதலில் நிகழ்ச்சியிலிருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். அதன்பின் நிகழ்ச்சியை சுவாரஸ்யம் ஆகும் வகையில், வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வகையில், பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து இருந்தார்கள். அதில் வர்ஷினி வெங்கட், ராயன், ராணுவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் என்ட்ரி கொடுத்திருந்தார்கள். மேலும், கடந்த வாரம் நாமினேஷனில் குறைவான வாக்குகளை வர்ஷினி, சிவகுமார், சாச்சனா பெற்றிருந்தார்கள். கடைசியில் வர்ஷினி எலிமினேட் ஆகியிருந்தார்.
அர்ச்சனா மற்றும் அருண் காதல்:
இதற்கிடையே, பிக் பாஸ் 8 போட்டியாளர் அருண் பிரசாத்துக்கு ஆதரவாக , கடந்த சீசன் டைட்டில் வின்னரான அர்ச்சனா பதிவுகளை போட்டுக் கொண்டு வருகிறார். அதேபோல் சமீபத்தில் கூட அர்ச்சனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பிக் பாஸ் வீட்டில் இருந்து அருண் பிரசாத் பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. அதற்கு அர்ச்சனா, நன்றி சொல்லி அருண் பேசிய வீடியோவை ஷேர் செய்து இருந்தார். அதோடு கடந்து வந்த பாதை டாஸ்க்கில் கூட, அருண்பிரசாத் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறியிருந்தார்.
அர்ச்சனாவை ட்ரோல் செய்தார்கள் :
இதன் மூலம் அர்ச்சனா- அருண் காதலிப்பது உறுதியாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் அர்ச்சனா கடந்த சீசன் ஜெயித்தது எப்படி என, பிக் பாஸ் வீட்டில் அருண் சில இடங்களில் கூறிய விஷயங்களால் நெட்டிசன்கள் அர்ச்சனாவை ட்ரோல் செய்து இருந்தார்கள். அதோடு பிக் பாஸ் வீட்டில் அருண் செய்யும் சில விஷயங்களுக்காக இணையவாசிகள் அர்ச்சனாவை திட்டி பதிவிட்டு வந்தார்கள். சூழ்நிலை இப்படி இருக்க, அர்ச்சனா இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார்.
நான் பொறுப்பேற்க முடியாது:
அதில், ‘ என் வாழ்க்கையில் நான் இந்த இடத்திற்கு வர ஒவ்வொரு அடியிலும் பெரும் சவால்கள், விமர்சனங்கள், எண்ணற்ற தியாகங்களை சந்தித்து இருக்கிறேன். அருண் பிரசாதும் நானும் வெவ்வேறு விருப்பங்களை கொண்ட இரண்டு தனித்தனி நபர்கள். எனக்கு இருக்கும் மற்ற நண்பர்களைப் போலவே நான் அவரை ஆதரிக்கிறேன். ஆனால், அவருடைய செயல்களுக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்பது போல் பதிவு செய்திருந்தார். அதனால்,’அருணுக்கு எதிராகத்தான் அர்ச்சனா பேசுகிறார் என்றும் அருண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடும் கேம் அர்ச்சனாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை ‘
BTW, I never disowned our relationship and will never do ! Arun means the world to me, and that will never change—even if the whole world turns against him !
— Archana Ravichandran (@Archana_ravi_) November 27, 2024
(Just a clarification to those who had difficulty in understanding my last tweet and spreading false news on youtube !)
அருண் என் உலகம்:
இவர்கள் இருவரும் பிரேக்கப் செய்து பிரியப் போகிறார்களா என்பது போல் இணையவாசிகள் பேசி வந்தார்கள். தற்போது அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், ‘அருண் தான் என் உலகம். நான் அவரை எதிர்த்து எந்த ஒரு பதிவையும் போடவில்லை. எங்கள் உறவில் எந்த ஒரு விரிசலும் இல்லை. உலகமே அவரை எதிர்த்து நின்றாலும் அவருக்கு துணையாக நான் என்றுமே நிற்பேன் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதோட இந்த பதிவு, தவறான செய்திகளை பரப்பும் youtube சேனல்களுக்கு தெளிவுபடுத்த தான் போடுகிறேன் என்று அர்ச்சனா பதிவிட்டுள்ளார்.