உயிருக்கு போராடி வரும் பிரபல நடிகைக்கு தன்னுடைய உறுப்பை தானம் செய்ய முன்வந்த ரசிகர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் லலிதா. இவர் காதலுக்கு மரியாதை, காற்று வெளியிடை, அலைபாயுதே, உள்ளம் கேட்குமே, கிரீடம், மாமனிதன் போன்ற ஏராளமான தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதோடு 300க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
மேலும், இவர் இயக்குனர் பரதனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 1992ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் படத்தை இயக்கியவர் தான் பரதன். இவருடைய மனைவி லலிதாவுக்கு தற்போது 73 வயது ஆகிறது. சமீபத்தில் இவர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது மருத்துவ செலவு மொத்தத்தையும் கேரள அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்து இருந்தார்கள்.
இந்த சூழ்நிலையில் லலிதாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி மருத்துவர்கள் அறிவித்திருந்தார்கள். இதனையொட்டி கல்லீரல் தானம் கோரி அவருடைய மகள் குட்டி சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் இதை பார்த்த லலிதாவின் தீவிர ரசிகரும், நாடக கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான கலாபவன் சோபி என்பவர் கல்லீரல் தானம் செய்யும் முன் வந்து இருக்கிறார். மேலும், இதுகுறித்து அவர் பேட்டியில் கூறியிருப்பது, நடிகை லலிதாவுக்கு கல்லீரல் தானம் செய்ய நான் முன் வந்திருக்கிறேன்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும் நான் தகவல் சொல்லி இருக்கிறேன். எனக்கு இப்போது 54 வயதாகிறது. லலிதாவுக்கும் எனக்கும் ஒரே குரூப் ரத்தம் என்பதால் தான் இந்த முடிவை நான் எடுத்தேன். அதோடு எனக்கு மது பழக்கமோ, புகை பிடித்தல் பழக்கமோ கிடையாது. அதனால் கண்டிப்பாக என்னுடைய கல்லீரல் அவருக்கு பொருந்தும். அதுமட்டும் இல்லாமல் கல்லீரல் கொடுப்பதில் எனக்கு சந்தோஷம் என்று கூறியிருந்தார். இவரின் இந்த செயல் குறித்து சோசியல் மீடியாவில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.