அப்படி யாரும் என்னை வற்புறுத்தவில்லை – அரியலூர் மாணவியின் புதிய வீடியோ

0
718
Ariyalur
- Advertisement -

பொட்டு வைக்கக்கூடாது என்று என்னை யாரும் வற்புறுத்தவில்லை என்ற அரியலூர் மாணவியின் புதிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி என்ற ஊரில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் படித்தவர் அரியலூரை சேர்ந்த மாணவி. இவர் அங்கு உள்ள மகளிர் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் விடுதி வார்டன் சகாயமேரி அந்த மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாற சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். ஆனால், மாணவி மாறுவதற்கு மறுபபு தெரிவித்திருக்கிறார். இதனால் கோபம் அடைந்த விடுதி வார்டன் அனைத்து அறைகளையும் அந்த மாணவியை வைத்து சுத்தம் செய்யுமாறு துன்புறுத்தி கொடுமை செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனால் மனமுடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும், மாணவியின் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவருடைய தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர், என் மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த டார்சலால் தான் அவள் தற்கொலை செய்து கொண்டார்.

- Advertisement -

தற்கொலை செய்த மாணவியின் தந்தை அளித்த புகார்:

எனவே இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும். என் மகளுக்கு நீதி வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இது தொடர்பாக இந்த வழக்கை நீதிபதி விசாரிக்கிறார். அப்போது நீதிபதி கூறியிருப்பது, மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். தஞ்சாவூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மாணவியின் பெற்றோர் தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். அந்த வாக்குமூலத்தை மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

மாணவியின் தந்தை அளித்த வாக்குமூலம்:

அதன் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவியின் பெற்றோர் தஞ்சாவூரில் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் மாணவியின் புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மாணவி கூறியிருப்பது, எப்போதும் நான் தான் என்னுடைய வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவேன். ஆனால், என் குடும்ப சூழல் காரணமாக பள்ளிக்கு சரியாக செல்ல முடியவில்லை. தினமும் லேட்டாக தான் போவேன். அதனால் அங்குள்ள சிஸ்டர் என்னை கணக்கு பார்க்க சொல்வார்கள். இல்லை நான் படிக்க வேண்டும் என்று கூறினாலும் அவர்கள் என்னை விட மாட்டார்கள்.

-விளம்பரம்-

மாணவியின் புது வீடியோ:

பரவாயில்லை நீ இதெல்லாம் எழுதி கொடுத்துட்டு உன் வேலையை பார் என்று என்னை கட்டாயப்படுத்துவார்கள். அதோடு நான் சரியாக எழுதினாலும் தப்பு தப்பு சரியாக எழுதி என்று என்னை வற்புறுத்தினார்கள். அப்படியே ஒரு மணி நேரம் என்னை உட்கார வைத்து விடுவார்கள். அதனால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மதிப்பெண் குறைவாக எடுத்தேன். அனைத்து வேலைகளையும் செய்ய சொல்வார்கள். வீட்டுக்கு போக வேண்டும் என்று கேட்கும்போது விடமாட்டார்கள். இங்கேயே இருந்து படி என்பார்கள். இந்த மன அழுத்தத்தினால் தான் என்னால் படிக்க முடியாமல் போனது.

வைரலாகும் மாணவியின் வீடியோ:

இதனால் நான் விஷம் குடித்து விட்டேன். அது மட்டும் இல்லாமல் என்னை போட்டு வைக்கக் கூடாது என்று வற்புறுத்தவில்லை என்று மாணவி கூறி இருக்கிறார். இப்படி மாணவியின் வாக்குமூலம் என்று வெளிவந்து உள்ள புதிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்தும், இது உண்மையா? பொய்யா? பள்ளி நிர்வாகம் ஏதாவது கோல்மால் செய்த வேலையா? என்று கேட்டு வருகிறார்கள். இதற்கு போலீஸ் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement