கிளாமர் உடையில் போஸ் கொடுத்த அர்ஜுனின் இளைய மகள்- சினிமாவுக்கு வர சொல்லும் ரசிகர்கள்

0
1727
- Advertisement -

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் கவர்ச்சியில் உடையில் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் 90 கால கட்டம் தொடங்கி இன்று வரை படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் இவர் ஆக்ஷன் படங்களில் தான் நடித்து வருகிறார். இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் 90 காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவின் புரூஸ்லி என்று பெயரெடுத்தவர் நடிகர் அர்ஜுன். இவர் 1984 ஆம் ஆண்டு நன்றி என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ஆக்ஷன், அதிரடி, தேசப்பற்று பாணியில் இருக்கும். இதனாலே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

- Advertisement -

அர்ஜுன் திரைப்பயணம்:

மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். அதேபோல சுமார் 5க்கும் மேற்பட்ட பாடல்களையும் அர்ஜுன் பாடி இருக்கிறார். தற்போது அர்ஜுன் வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் மிரட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சாகச நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியையும் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி இருந்தார்.

அர்ஜுன் குடும்பம்:

இறுதியாக மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த மரைக்காயர் படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரது முதல் மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டது யானை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அர்ஜுன் மூத்த மகள் :

அதன் பின்னர் அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்திலும் நடித்தார். தற்போது அர்ஜுன் தன் மகளை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன், உமாபதியை கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் பச்சை கொடி காட்டி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி தம்பி ராமையா திருமணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜுன் இளைய மகள்:

இந்த நிலையில் அர்ஜுனின் இளைய மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா. இவர் கிளாமரான உடை அணிந்து ஆற்றில் குளிப்பது போல் போட்டோக்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலருமே நீங்கள் ஹீரோயினியாக நடியுங்கள் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். ஏற்கனவே அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் ஜெயிக்க போராடி கொண்டு இருக்கிறார். தற்போது அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனாவும் கூடிய விரைவில் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement