அர்ஜுனை தமிழ் சினிமாவில் அறிமுக செய்ய விஜயகாந்த் தான் உதவி இருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறது. பின் இவர் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் தீவிரம் காட்டியிருந்தார். அதற்குப் பிறகு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இவர் நடிப்பு, அரசியல் என இரண்டிலும் விலகிவிட்டார்.
கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவால் விஜயகாந்த் இறந்துவிட்டார். இவருடைய மறைவு திரை பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலருக்கும் பேர் அதிர்ச்சியை கொடுத்தது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் விஜயகாந்தின் இறப்பு புரட்டி போட்டது. மேலும், விஜய் காந்த் நடிகர் என்பதை தாண்டி நல்ல உள்ளம் கொண்டவர். தமிழ் சினிமா உலகில் உள்ள பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எல்லாம் விஜயகாந்த் அறிமுகப்படுத்தி வைத்தது தான்.
அர்ஜுன் முதல் படம்:
இந்த நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுனை தமிழ் சினிமாவில் விஜயகாந்த் தான் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 1984 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருந்த படம் நன்றி. இந்த படத்தின் மூலம் தான் அர்ஜுன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். ஆனால், இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. கன்னடத்தில் வெளியான தாலியா பாகியா என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் நன்றி.
விஜயகாந்த் சொன்ன ஆலோசனை:
இந்த படத்தை நடிகர் ஏவிஎம் ராஜன் தான் தயாரித்திருந்தார். முதலில் இந்த படத்தில் அர்ஜுன் நடித்த வேடத்தில் விஜயகாந்த்தை தான் நடிக்க வைத்த இருந்தார்கள். ஆனால், விஜயகாந்த் இந்த கதாபாத்திரத்துக்கு நடிக்க அதிக சம்பளம் கேட்டிருந்தார். அதை தர முடியாது என்று தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. பின் விஜயகாந்த், கன்னடத்தில் நடித்த நடிகரையே இந்த படத்திலுமே நடிக்க வைக்கலாமே என்று ஆலோசனை சொன்னார்.
அர்ஜுன் திரைப்பயணம்:
அதற்கு பிறகுதான் அர்ஜுனனை நன்றி படத்தில் நடிக்க வைத்தார்கள். இந்த படம் பெரிய அளவு வெற்றியடையவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து மிகப்பெரிய பிரபலமானார். இதற்கு காரணம் விஜயகாந்த் தான். கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் 90 கால கட்டம் தொடங்கி இன்று வரை நடித்து கொண்டு இருக்கிறார்.
அர்ஜுன் நடிக்கும் படம்:
பெரும்பாலும் இவர் ஆக்ஷன் படங்களில் தான் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் அர்ஜுன் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் பெற்று இருந்தது. தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் நடிக்கிறார். இதை தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.