நடிகை மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடுத்த அர்ஜுன்..!ஆக்ஷனில் இறங்கிய அர்ஜுன்..!

0
916
Arjun
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் ஒரு பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர். 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

Arjun

- Advertisement -

இப்படிபட்ட அந்தஸ்தில் உள்ள நடிகர் அர்ஜுன் மீது அவருடன் “நிபுணன்” படத்தில் இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.நிபுணன் படத்தின் போது நடிகர் அர்ஜுன் நெருக்கமான காட்சிகளை இயக்குனரிடம் வேண்டும் என்றே கேட்டு வாங்கினார் என்றும் அந்த காட்சியில் வேணுமென்றே பின் பாகத்தை தடவினார் என்றும் நடிகை ஸ்ருதி நாராயணன் குற்றம் சாட்டி இருந்தார்.

நடிகர் அர்ஜுனா இது போல செய்தார் என்று பலரும் அதிர்ச்சியில் இருந்து வரும் நிலையில் நடிகர் அர்ஜுன், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த புகாரை அர்ஜுன் சார்பாக அர்ஜூனின் உறவினர் சிவா,என்பவர் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் நடிகர் அர்ஜூன் மீது மீடூ ஹேஷ்டேக் கீழ் பாலியல் புகார் கூறியிருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்.

-விளம்பரம்-

அர்ஜுனிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் நடிகை ஸ்ருதி இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்று அக்டோபர் 20 முதல் 25 தேதிவரை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்களில் ஸ்ருதி பதிவு செய்த குற்றச்சாட்டுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.இதையடுத்து நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது 400 பக்கத்தில் புகார் எழுதப்பட்டு அவர் மீது கிரிமினல் சதி, பண பறிப்பு முயற்சி, ஆள் மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளில் எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement