லியோ படத்தின் அர்ஜுன் Glimpse வீடியோ : அர்ஜுனின் பெயர் என்ன தெரியுமா ? அப்போ இவங்க ரெண்டு பெரும் அண்ணன் தம்பியா ?

0
1614
Arjun
- Advertisement -

அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை மையமாக கொண்ட கதை. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது.

- Advertisement -

பெரும் தோல்வியடைந்த வாரிசு திரைப்படம் :

மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சென்னையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. திட்டமிட்டபடி இந்த படம் வெளியாகவும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள அர்ஜுன் கதாபாத்திரத்தின் Glimpse வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

-விளம்பரம்-

அர்ஜுன் கதாபத்திரம் :

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்திற்கான ப்ரோமோ கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது பிறந்தநாளில் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் அர்ஜுனின் கதாபாத்திரம் ஹரோல்ட் தாஸ் என்று இருப்பதால் இந்த படத்தில் சஞ்சய் தத்தும், அர்ஜுனும் அண்ணன் தம்பியாக நடித்துள்ளானரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சஞ்சய் தத்தின் சகோதரரா :

லியோ படத்தில் நடித்த பல முக்கிய நடிகர்கள் பற்றிய விஷயங்களை லோகேஷ் கனகராஜ் பொத்தி பொத்தி வைத்து வருகிறார். மேலும், இந்த படத்தில் அர்ஜுன், மிஸ்கின், சஞ்சய் தத், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை தவிர இன்னும் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் இமைக்க நொடிகள் படத்தில் கலக்கிய பாலிவுட் நடிகர் அனுரங் கஷ்யப் கூட நடித்துள்ளார் என்பதை சமீபத்தில் மன்சூர் அலிகான் உறுதி செய்து இருந்தார்.

Advertisement