பாலியல் குற்றச்சாட்டில் கைதாகிறாரா நடிகர் அர்ஜுன் ..!பெங்களூரில் பரபரப்பு ..!

0
262
Arjun

தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் ஒரு பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர். 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார்.

Arjun

இப்படிபட்ட அந்தஸ்தில் உள்ள நடிகர் அர்ஜுன் மீது அவருடன் “நிபுணன்” படத்தில் இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த நடிகர் அர்ஜுன்,நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறும் குற்றச்சாட்டு உண்மை இல்லை எனவும் அவர் மீது வழக்கு தொடரப்போவதாகவும் கூறியிருந்தார்.அதே போல அர்ஜுன் தரப்பில் இருந்து நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

அதே போல நடிகை ஸ்ருதி ஹரிஹரனும்,நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகாரின் பெயரில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் குற்றத்திற்காக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

தற்போதய நிலையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் சார்பில்அளித்த புகாரின் பெயரில் பெங்களூர் போலீசார் நடிகர் அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார்களாம்.இதனால் நடிகர் அர்ஜுன் பாலியல் குற்றச்சாட்டில் கைதாக வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.