தன்னை விட வயதான நடிகையுடன் காதல். வயது வித்தியாசம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு போனி கபூர் மகன் பதிலடி – (அடேங்கப்பா இத்தனை வயசு வித்யாசமா)

0
976
arjun
- Advertisement -

தன் காதலின் வயது வித்தியாசம் குறித்து எழுந்து வந்த சர்ச்சைக்கு அர்ஜுன் கபூர் அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அர்ஜுன் கபூர். இவர் மும்பையை சேர்ந்தவர். இவர் பாலிவுட்டில் பிரபலமான தயாரிப்பாளர் போனி கபூரின் மகனாவார். போனி கபூரின் முதல் மனைவி மோனா ஷோரி. இவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் அர்ஜுன் கபூர். இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த Ishaqzaade என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் Aurangzeb, Gunday போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

கடைசியாக இவர் நடித்த 2 ஸ்டேட்ஸ் படம் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து இவர் Tevar என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் சினிமாவில் சில காலம் துணை இயக்குனர், துணை தயாரிப்பாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார். அர்ஜுன் கபூர், ஜான் ஆபிரஹாம் உடன் நடித்திருக்கும் ‘Ek Villain 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இது ஒரு பக்கமிருக்க அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா என்பவரை சில வருடங்களாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மலைக்கா டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அர்ஜுன் கபூர் – மலைக்கா அரோரா குறித்த சர்ச்சை:

அதுமட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டில் இருந்தே ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் அறிவித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து அர்ஜுன் கபூர் – மலைக்கா அரோரா குறித்து சோசியல் மீடியாவில் பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது. இருந்தாலும் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இருவர் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்த உடனே இவர்கள் வயது வித்தியாசம் குறித்த சர்ச்சை சோசியல் மீடியாவில் எழ தொடங்கியது.

அர்ஜுன் கபூர் – மலைக்கா அரோரா வயது வித்தியாசம்:

ஏன்னா, அர்ஜுன் கபூர் – மலைக்கா அரோரா இருவருக்கும் இடையே 12 வருடங்கள் வித்தியாசம் இருக்கிறது. அதிலும் இவர்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்ததிலிருந்தே இவர்களுடைய வயது வித்தியாசம் குறித்து சோசியல் மீடியாவில் பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் தான் இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து தற்போது அர்ஜுன் கபூர் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இந்திய மக்கள் வதந்திகளை விரும்புகிறார்கள்.

-விளம்பரம்-

அர்ஜுன் கபூர் அளித்த பேட்டி:

மற்றவர்களுடைய உறவைப் பற்றிப் பேசும் எல்லோரும் ஜனனிகளாக (அதாவது இந்தியில் வயதான தாயை குறிக்கும் சொல்) மாறி விடுகிறோம். மக்கள் எல்லாவற்றின் மீதும் ஒரு கருத்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு கருத்து சொல்வது பிடிக்கும். அதிலும் மற்றவர்கள் உறவைப் பற்றிப் பேசும்போது எப்போது கல்யாணம் ஆகும்? இது நீடிக்கும் என நினைக்கிறாயா? அவனிடம் அவள் எதை பார்த்திருப்பாள்? அவன் பார்க்க எப்படி இருக்கிறான்? கேரியர் நிச்சயம் வீழ்ந்து விடும் என்பது போல பேச வேண்டும் என்பதற்காக பேசுபவர்கள் இருக்கிறார்கள்.

மக்களின் மனநிலை குறித்து அர்ஜுன் கபூர் சொன்னது:

அவர்கள் உங்களை பற்றி நினைப்பதை மாற்றிக்கொள்ள ஏதாவது ஒரு நாள் அல்லது உங்களைப் பற்றி நீங்கள் விளக்கிச் சொல்லும் ஒரு நாள் வரும். சொந்த வாழ்க்கையைப் பொறுத்தவரை மற்றவர்களின் யூகங்களை கேட்கும்போது எந்தவித உணர்ச்சியும் இன்றி உங்களுடைய உறவை பற்றி தோன்றுவது எல்லாம் எழுதுவது வெறும் அற்பத்தனமான பொழுதுபோக்கு என்று வருத்தத்துடன் அர்ஜுன் கபூர் கூறியிருந்தார். இப்படி அர்ஜூன் கபூர் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement