7 வருட காதல், என்னை ஏமாத்திட்டார். இளம் நடிகை கொடுத்த புகார். போக்கிரி பட ஒளிப்பதிவாளர் கைது.

0
1658
- Advertisement -

டோலிவுட் சினிமாவில் சந்தீப் வாங்கா ரெட்டி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த அர்ஜுன் ரெட்டி படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் நதியில் பிரபலமானவர் நடிகை சாய் சுதா. நடிகை சுதா அவர்கள் பிரபல ஒளிப்பதிவாளரான ஷ்யாம் கே. நாயுடுவை 7 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மேலும், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் நடிகை சுதாவை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். பின் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்து உள்ளனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை சாய் சுதா அவர்கள் ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே. நாயுடு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். ஷ்யாம் அவர்கள் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன் உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அந்த புகாரில் அவர் கூறி இருப்பது, .ஷ்யாம் அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி காதலிக்க வைத்தார்.

- Advertisement -

என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், தற்போது திருமணம் செய்யாமல் ஏமாற்றுகிறார். என்னை நம்ப வைத்து ஏமாற்றிய ஷ்யாம் கே. நாயுடு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின் ஷியாம் கே நாயுடுவை கைது செய்தனர்.

மேலும், போலீஸர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு மீது போதைப்பொருள் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement