தமிழின் போர்வையில் திமுக ஊடகங்களின் பின்னணியில் செயல்படும் ஜேம்ஸை மக்கள் புறக்கணிப்பார்கள் – அர்ஜுன் சம்பத் காட்டம்

0
301
arjunsampath
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். அதோடு இவரின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் சமீப காலமாக இளையராஜா மீது பல விதமான குற்றசாட்டுகள் வருகின்றன. குறிப்பாக மேடை நாகரீகம் இல்லாமல் இருப்பது, மற்றவர்களை கேவலமாக பேசுவது என பலர் இளையராஜாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
James

இப்படி ஒரு நிலையில் தான் சமீபத்தில் ஊடகம் ஒன்றிக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில் இளையராஜா பற்றி கடுமையான விமர்சங்களை வைத்துள்ளார்.ஜேம்ஸ் வசந்தன் அந்த நேர்காணலில் பேசும் போது இளையராஜா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட படத்திற்கு இளையராஜா தகுதியானவர் தான் ஆனால் ஒரு சக மனிதராக அவர் மிகவும் மட்டமானவர். இளையராஜா பல ஆண்டுகளாக ஆன்மீகத்திற்குள் இருந்தவர். அப்படி ஆன்மீகத்திற்குள் அதிகமாக செல்ல செல்ல பெருந்தன்னை, அடக்கம், சகிப்புத்தண்மை, ஏற்றுக்கொள்ளுல் போன்ற குணங்கள் வரும்.

- Advertisement -

நிகழ்ச்சியில் நடந்தது :

ஆனால் இளையராஜா ஆன்மீகத்திற்குள் செல்கிறேன் என்று கூறி அசிங்கமாக பேசுகிறார்.உதரணமாக கூகிள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான இயேசு கிறிஸ்து உயிர்தெழுதல் பற்றி முட்டாள் தனமாக பேசிவிட்டு ரமண மஹரிஷி ஒருவர் தான் உண்மையில் உயிர்தெழுந்தார் என்று கூறினார். அவர் அப்படி பேசுவதற்கு அவர் என்ன வரலாற்றை ஆசிரியரா? அல்லது பெரிய ஆராய்ச்சியாளரா?. இயேசு கிறிஸ்து நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர் கூறுவது காயப்படுத்துவதாக இருக்காதா?

வீடியோவில் 16 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

அப்படி மற்றவர்களை கேவலப்படுத்தி தான் மட்டும்தான் சரி என நினைக்கும் அந்த புத்தியால் தான் நான் அவரை மட்டமான மனிதர் என்று கூறுகிறேன்.மேலும் தான் பேசுவது சமூக வலைதளங்களில் செல்லும் என்றும் இதனால் என்னை எப்படியெல்லாம் திட்டுவார்கள் என்று எனக்கு தெரியும். பல ஆண்டுகளாக இந்த துறையில் நான் இருந்து வருகிறேன். அதாவது பிரபலங்கள் தங்களுக்கு விருப்பமானாலும், விருப்பம் இல்லை என்றாலும் அவர்களை முன்மாதிரியாக வைத்து செயல்படுபவர்கள் கண்டிப்பாக ஊரில் சில பேர் இருப்பார்கள். எனவே நான் சரியானவராக நடந்து கொள்ள வேண்டும்.

அதனை தவிர்த்து கேவலமாக நடந்து கொண்டு, நம்மை முன்மாதிரியாக எடுத்துக்கொண்ட நபர் நம்மை பற்றி கேவலமாக பேசினார் என்றால், நாம் நமக்கு கிடைத்த அந்த பேருக்கும் புகழுக்கு தகுதியானவராக நாம் நடந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். நாம் சமுதாயத்தில் பிரபலமாக இருந்து பல அங்கீகாரத்தை அனுபவிக்கும் போது அவற்றிக்கு கொடுக்கும் ஒரே விலை தன்னுடைய தனித்தன்மை மற்றும் சுதந்திரத்தை இழப்பதுதான்.

அவர் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கூற எனக்கு அனுமதி இல்லை. ஆனால் ஒரு பிரபலமான மனிதராக உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் இந்த சமுதாயத்திற்கு தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் போது அவர் நடந்து கொள்ளும் விதம் தான் விமர்சனத்திற்கு உள்ளாகிறது என தெரிவித்தார் ஜேம்ஸ் வசந்தன். ஜேம்ஸ் வசந்தனின் இந்த கருத்திற்கு அதரவு எதிர்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் இளையராஜாவை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தனை கண்டித்து அர்ஜுன் சம்பத், பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘இசைஞானி இளையராஜாவை மத காழ்ப்புணர்ச்சியுடன் இழிவு படுத்தி பேசியுள்ள ஜேம்ஸ் வசந்தனுக்கு கண்டனம்! இரமண மகரிஷியின் உயிர்த்தெழுதல் குறித்து அவமதித்து பேசிய கிறிஸ்தவ மத வெறியன் ஜேம்ஸ் வசந்தன் என்று கூறியுள்ளார்.

Advertisement