‘அதாண்டா இதாண்டா அர்ஜுன் சம்பத் நான்தாண்டா’ – அருணாச்சலம் கெட்டப்பில் தெறி நடனம், வைரலான வீடியோ.

0
793
arjun
- Advertisement -

பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் பலர் அரசியலுக்கு வருவது வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி தற்போது வரை பல நடிகர்கள் சினிமாவில் நடித்து முடித்து அந்த பிரபலத்தின் மூலம் அரசியலில் குதிக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், சமீப காலமாகவே அரசியலில் இருக்கும் பல நபர்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார்கள். சமீபத்தில் கூட அதிமுக எம் எல் ஏவின் மகன் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் போல சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த நிலையில் தற்போது இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் படத்தில் நடிப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இயங்கி வரும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். இவர் அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை முன்வைப்பதில் வல்லவர். இதனால் இவரை குறித்து ஏதாவது ஒரு செய்தி சோசியல் மீடியாவில் உலா வரும். இந்நிலையில் தற்போது இவர் புதிய தமிழ் படம் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அர்ஜுன் சம்பத் நடிக்கும் படம் பற்றிய தகவல்:

அர்ஜுன் சம்பத் நடிக்கும் படத்தின் பெயர் நல்லது நடக்கும். இந்த படத்தை ஆர் கே ஜி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் கங்காதரன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மனிஷ் இசையமைக்கிறார். மேலும், கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் என எல்லாத்தையும் கங்காதரன் செய்கிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் இரண்டு பாடல்களை கங்காதரன் எழுதி இருக்கிறார்.

அர்ஜுன் சம்பத் நடிக்கும் புது படம்:

மீதி பாடல்களை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார். அதோடு இந்த படத்தின் மூலம் தான் கங்காதரன் நாயகனாக சினிமா உலகிற்கு களமிறங்க இருக்கிறார். இந்த படத்தில் வரும் வசூலில் 60 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் மற்றும் பிற சமூக சேவைகளுக்கு வழங்க இருப்பதாக கங்காதரன் முன்னாடி அறிவித்திருந்தார். இந்த ஒரு நிலையில் இந்த படத்தின் பாடல்கள் படப்பிடிப்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் சமீபத்தில் நடைபெற்றது.

-விளம்பரம்-

ரஜினி கெட்டப்பில் நடனமாடிய அர்ஜுன் சம்பத் :

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ஜுன் சம்பத் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த அருணாச்சலம் படத்தில் வரும் அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா என்ற பாடலில் ரஜினி போட்டிருந்தா கெட்ட போலவே வேஷ்டி சட்டை இடுப்பில் துண்டு என அர்ஜுன் சம்பத் கெட்டப் போட்டு நடனமாடி இருக்கிறார்.

வைரலாகும் அர்ஜுன் சம்பத்தின் வீடியோ:

அரசியல் தளத்தில் பரபரப்பாக பேசி இருக்கும் அர்ஜுன் சம்பத் தமிழ் படம் ஒன்றில் நடனமாடும் வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் கமெண்டுகளை தெறிக்க விடுகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகிறார்கள்.

Advertisement