சமஸ்கிருத பெயர் முதல் நாமம் வரை – அடேங்கப்பா அவதாரில் இத்தனை இந்து அடையாளங்களா ? Decode செய்த இந்து மக்கள் கட்சி.

0
343
avatar
- Advertisement -

டைட்டானிக், டெர்மினேட்டர், அலீட்ட பேட்டில் ஏஞ்சல் போன்ற வெற்றித்திரைப்படங்களை கொடுத்த ஜேம்ஸ் கேமரூன் 2009ஆம் ஆண்டு வெளியிட்டு உலகம் முழுவதும் பிரம்மிக்க வைத்த படம் அவதார். இப்படத்தில் கதை மற்றும் கிராபிக்ஸ் வேறொரு பரிமாணத்தில் முழுவத்துக்காக CGIயின் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது. டைட்டானிக் படத்தை போலவே ஜேம்ஸ் எடுத்த இப்படமும் உலக அளவில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகும் என அப்போதே ஹிண்ட் கொடுத்திருக்கும் வகையில் கிளைமாக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

-விளம்பரம்-

13 வருடங்களுக்கு பிறகு வெளியான படம் :

மேலும் இந்த படத்திற்காக ஜேம்ஸ் கேமரூன் உலகிலேயே மனிதன் அறிந்த மிக ஆளமான கடல்பகுதியான “மரியானா ட்ரென்ச்” பகுதியில் பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர் 13 வருடங்களுக்குப் பின் வெளிவந்த இந்த படத்திற்கு அவதார் : தி வே ஆஃப் வாட்டர் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனனே வந்த அவதார் 1 பெரிய அளவில் ஹிட் அடித்து பல கோடிகளை வசூலித்த நிலையில். இப்படத்திற்க்கான ஆவல் உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகவே இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் அவதார் : தி வே ஆஃப் வாட்டர் கடந்த 16ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இருந்தாலும் 13 வருடங்களுக்கு பின்னர் வெளியான அவதார் படத்தில் பகுதி 2 என்பதினால் த்ற்போது கிடைத்துள்ள தகவலின் படி சுமார் 150மில்லியன் அமெரிக்க டாலர்களை இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ் நாட்டில் பல கோடிகளை வசூலித்த நிலையில் பெரிய படங்கள் இல்லை என்பதினால் மேலும் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த IMK :

இந்த நிலையில் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் அவதார் படத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்விட் பதிவு ஒன்றை போட்டுள்ளர். அதில் `ஆர்ய பிராமண ஆணாதிக்க சிந்தனைகளை உலகிற்கு பரப்பியதற்காக ஜேம்ஸ் கேமரூனை “இந்து மக்கள் கட்சி” வன்மையாக கண்டிக்கிறது என்று கூறியிருந்தார். மேலும் படத்தில் காட்டப்படும் காட்சிகளை விமரிசித்தும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

அவதாரம் – சமகிருத பெயர்
நீலம் – கிருஷ்ணரின் நிறம்
நெற்றி – திருமண்(நாமம்)
நாகம் – கருடன்
திமிங்கிலம் – மாட்சி அவதாரம்
அமுதம் – அம்ருத்

கலாய்க்கும் நெட்டிசன்கள் :

இந்து மக்கள் கட்சி இப்படி கூறியதற்கு `இது அவதார் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனிற்கு தெரியுமா என்றும், இன்னும் சிலர் கழுத்தில் துளசி மலையை மறந்து விடீர்கள் என்றும் நெட்டிசன்கள் பலர் இந்த ட்விட் பதிவை டேக் செய்து கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் அவதார் தி வே ஆஃப் வாட்டர் வெளியாகி 150 கோடிகளை வசூலித்த நிலையில் இதன் முதல் படமான அவதார் 2009தை வசூல் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement