ஆக்சன் கிங் அர்ஜுன் மகளையும் விட்டு வைக்காத கொரோனா – அவரே வெளியிட்ட தகவல்.

0
1997
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-
arjun

இந்த நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 90களின் துவக்கத்தில் தமிழ் திரையுலகில் ஹீரோவாக கொடி கட்டி பறந்தவர் அர்ஜுன் சர்ஜா. இவரது முதல்வன் படம் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்த படமாகும். நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : நீ ரெண்டாவது லைவ்ல வா, நான் அந்த நேபால் பொண்ணோட லைவ் வரேன் – பீட்டர் பவுலுக்கு ரவீந்திரன் சவால்.

- Advertisement -

மேலும், இவரது முதல் மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டது யானை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் அர்ஜுன் இயக்கிய, சொல்லி விடவா படத்தின் தெலுங்கு படத்திலும் நடித்தார். இந்த நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா,சமீபத்தில் எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நான் வீட்டுத் தனிமையில், மருத்துவர்களின் ஆலோசனையின்படி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும், உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். அன்புடன், ஐஸ்வர்யா அர்ஜுன்” என்று தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement