மறைந்த தனது மருமகனின் மகனை காண வீடியோ கால் செய்த அர்ஜுன் – நெகிழ்ச்சியான வீடியோ.

0
2346
arjun
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா ராஜ்ஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் மருமகனும் தான் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா. ஜூன் 6 ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.

-விளம்பரம்-

பின் உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த போது அவருக்கு 39 வயது தான் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.நடிகை மேக்னாவும், சிரஞ்சீவி சார்ஜாவும் 10 வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் கூட நடிகர் சிரஞ்சீவியின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

- Advertisement -

அதில் அனைவரும் சிரித்து கொண்டு இருந்தனர். அதற்கு காரணத்தை சொன்ன மேக்னா, சிரஞ்சீவிக்கு நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான் ஆசை. அதை நிறைவேற்றத்தான் நாங்கள் அனைவரும் அன்று முழுதும் சந்தோசமாக அவரது இரங்கலை அனுசரித்தோம் என்று கூறியிருந்தார்.சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் கற்பாக இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. சமீபத்தில் நடிகை மேக்னாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ,

https://www.youtube.com/watch?v=pMjIpuAYjGs

அதில் கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட்டுடன், தன்னுடைய வளைக்காப்பு நிகழ்வு படங்களை பகிர்ந்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் மேக்னா ராஜிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் மறைந்த தனது மருமகன் சிரஞ்சீவிக்கு பிறந்த மகனை வீடியோ கால் மூலமும் பார்த்து ரசித்துள்ளார். அந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement