தளபதி 67ல் நடிக்கும் பிரபல தமிழ் காமெடி நடிகரின் மகள் – யார் தெரியுமா?

0
661
- Advertisement -

தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துவந்தனர். பின்னர் 1,2,3 தேதிகளில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் உறுதி அளித்து இருந்தார். அந்த வகையில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டது.

-விளம்பரம்-

படங்குழு :

அந்த வகையில் இந்த் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர் மிஷ்கின், மன்சூர் அலி கான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கவுதம் மேனன், அர்ஜுன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது, அதே போல இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருபாதகவும் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

- Advertisement -

மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக மணிஒஜ் பரமஹசாவும், இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரனும் , காலை இயக்குனராக N.சதிஷ் குமாரும் பணியாற்ற உள்ளனர். இப்படத்தின் பூஜை நிறைவடைந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் அர்ஜுனன் மகள் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அவர் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

நடிகர் அர்ஜுனன் மகள் :

அவர் போட்டிருந்த பதிவில் தளபதி 67 படத்தின் பூஜை விடீயோவையும் புகைப்படத்தையும் பகிர்ந்து என்னுடைய மகள் இயல் “இளைய தளபதி” 67 படத்தில் நடிக்கிறார் எனவே உங்களுடைய அன்பும் ஆசிர்வாதமும் எங்களுக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் துல்கர் சல்மானும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரபலமான டிக்டாக்கர் அமலா ஷாஜி தளபதி 67ல் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அர்ஜுனன் மகள் இயல் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் பரவி வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

நடிகர் அர்ஜுனன் படங்கள் :

காமெடி நடிகரான அர்ஜுனன் தொடக்கத்தில் சிறிய சிறிய கதாபாத்திரங்கள் தான் நடித்து வந்தார். பின்னர் 2012ஆம் ஆண்டு வெளியான காதலில் சுதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் இவருக்கு திரையுலகில் நல்ல பெயர் கிடைத்தது. பின்னர் வாயை மூடி பேசவும், அரிமா நம்பி, கப்பல், யான், கணம், O2, வனமகன், நித்தம், ஒரு வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து விட்டார். இப்படி பட்ட நிலையில் தான் தற்போது இவருடைய மகளும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகி உள்ளது

Advertisement