ரம்ஜான் காலத்துலயாவது உண்மையை கடைப்பிடி – திவ்யாவிற்கு குழந்தை பிறந்த பின் அர்னவ் போட்ட தத்துவ பதிவால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
865
Arnav
- Advertisement -

திவ்யாவிற்கு குழந்தை பிறந்த பின் அர்னவ் போட்ட பதிவை திட்டி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள். கடந்த ஆண்டு சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது அர்னவ்-திவ்யா விவகாரம் தான்.நடிகர் ஆர்னவ், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து இருந்தார்கள்.பின் கடந்த ஆண்டு தான் ரகசியமாக திருமணம் செய்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக திவ்யா, காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார்.மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்து இருந்தார்.

- Advertisement -

இதை தொடர்ந்து திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அர்னவ் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து போலீஸ் அர்னவை கைது செய்தனர். பின் அர்னவ் ஜாமினில் வெளியில் வந்தார். வெளியில் வந்த பின்னரும் கர்ப்பமாக இருந்த திவ்யாவை அர்னவ் கண்டுகொள்ளவே இல்லை. மேலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் சேர்ந்து சமீபத்தில் திவ்யாவிற்கு வளைகாப்பை நடத்தி இருந்தனர்.

சமீபத்தில் திவ்யாவிற்கு வளைகாப்பை நடத்தி இருந்தனர். கடந்த மாதம் பேட்டி ஒன்றில் பேசிய திவ்யா ”இன்னும் பத்து பதினைந்து நாட்களில் குழந்தை பிறந்து விடும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், இன்று கூட ஓய்வெடுக்காமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அதனால் இது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். அவனை நல்ல மனிதனாக வளர்ப்பேன்.

-விளம்பரம்-

பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்றெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுப்பேன் என்று கண்ணீர் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தள்ளது. தனது மகளின் கையை பிடித்தவாரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் திவ்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த குழந்தையோட பாவம் உன்ன சும்மா விடாது அர்னவ் என்றும் கமன்ட் செய்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் திவ்யாவிற்கு குழந்தை பிறந்த பின்பு, ஆர்னவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘உங்கள் இதயம் உண்மையை உணர்ந்ததை மறுக்கும் போது உங்கள் மூளை உண்மையை அறியும். நீங்கள் பாதுகாப்பாக உணராதபோது யாரையும் அனுமதிக்க மாடீர்கள். அதற்கு காரணம் நேர்மையின் வலியை சமாளிக்க நீங்கள் தயாராக இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அர்னவ்வின் இந்த பதிவை கண்டு கடுப்பான ரசிகர்கள் பலரும் ‘உங்கள் ஈகோவை விட்டுவிட்டு போய் உங்கள் மகளை பாருங்கள்’ என்று பதிவிட்டு வருகின்றனர். அதே போல ரசிகை ஒருவர் ‘போய் மொதல்ல பொண்ண பாருய்யா உன் ஈகோ எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு… ரம்ஜான் காலத்துலயாவது உண்மையை கடைப்பிடி அப்புறம் கருத்தெல்லாம் பதியலாம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement