பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு போட்டியாளராக செல்லும் வாய்ப்பை அர்னவ் இழந்தது குறித்த செய்தி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று 52வது நாள். இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
முதலில் நிகழ்ச்சியிலிருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். அதன்பின் நிகழ்ச்சியை சுவாரஸ்யம் ஆகும் வகையில், வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக ஆறு பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து இருந்தார்கள். அதில் வர்ஷினி வெங்கட், ராயன், ராணுவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் என்ட்ரி கொடுத்திருந்தார்கள். மேலும், கடந்த வாரம் நாமினேஷனில் குறைவான வாக்குகளை வர்ஷினி, சிவகுமார், சாச்சனா பெற்றிருந்தார்கள். கடைசியில் வர்ஷினி எலிமினேட் ஆகியிருந்தார்.
வைல்டு கார்ட் என்ட்ரி:
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் 50வது நாளையொட்டி மற்றொரு போட்டியாளர் வைல்டு கார்டு என்ட்ரி கொடுப்பதாக கூறப்பட்டது. அதிலும், நிகழ்ச்சியில் இருந்து ஆரம்பத்திலேயே வெளியேறிய அர்னவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது அதில் பெரிய ட்விஸ்ட் நடந்திருக்கிறது. சமீபத்தில், பிக் பாஸ் தொடங்கி ஐம்பதாவது நாள் முடிந்த நிலையில் இரண்டாவது வைல்டு கார்டு என்ட்ரி குறித்து எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.
என்ன நடந்தது? :
அதாவது, முதலில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்குள் போகும்போது நான் கடைசிவரை இருப்பேன் என்று அர்னவ் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார். ஆனால், அங்கு போனதிலிருந்து அவர் பெரிதாக எதுவும் கன்டென்ட் தரவில்லை. அதனால், இரண்டாவது வாரமே அர்னவ் எவிக்ட் ஆகி இருந்தார். அதனால் தன்னை எவிக்ட் செய்ததால் அதிருப்தியில் வெளியே வந்து அவர் அழுதிருக்கிறார். அதோடு சேனல் மீதும் கடும் கோபத்தில் இருந்திருக்கிறார். அதோடு, நான் ரொம்ப எதிர்பார்ப்போட போனேன்.
புலம்பிய அர்னவ்:
ஆனால் ,என்னை சீக்கிரம் அனுப்பி விட்டாங்க. இப்படி தெரிந்திருந்தால் நான் நிகழ்ச்சிக்கு போயிருக்க மாட்டேன் என்று புலம்ப, சேனல் தரப்பில் இருந்து , ‘ ரீ என்ட்ரி மாதிரி ஏதாவது வாய்ப்பு இருந்தா பார்க்கலாம்’னு சொல்லி இருக்காங்க. அதனால், 50 வது நாள்ல ஏதாவது ட்விஸ்ட் இருக்கும் என்று தெரிந்து கொண்ட அர்னவ், 50 வது நாளில் தனது ரி- என்ட்ரி இருக்கலாம் என்று ஒரு பதிவை போட்டு இருக்கிறார். கடைசியில் அதுவே அவருக்கு வினையாகி விட்டது.
நழுவவிட்ட வாய்ப்பு:
பொதுவாக பிக் பாஸ் போட்டியாளர்கள் போட்டி குறித்து எந்த தகவலையும் வெளியே கூறக்கூடாது. அது தெரிஞ்சும் இவர் சோசியல் மீடியாவில் இப்படி பதிவிட்டதால், சேனல் தரப்பில் இவர் மேல் பயங்கர கடுப்பாகி இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் இரண்டாவது வைல்டு கார்டு என்ட்ரியை கைவிட்டு விட்டார்கள் என்று தெரிகிறது. முதல் நாளே விஜய் சேதுபதி அவர்கள் அர்னவிடம், ‘உங்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும்னு வச்சுக்கோங்க, வாயைத் திறந்து அதை கெடுத்துக்காதீங்க’ என்று சொன்னது குறிப்பிடத்தக்கது