ஒரு வெஸ்டர்ன் பாட்ல எப்படிடா தவில் வாசிக்கறதுனு யோசித்தேன், ஆனால், ரகுமான் – காதலன் பட பாடலின் ரகசியத்தை சொன்ன பிரபல தவில் வித்வான்.

0
761
arr
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று காதலன். இந்த படம் 1994ஆம் ஆண்டு வெளிவந்து இருந்தது. இந்த படத்தில் பிரபுதேவா, நக்மா, வடிவேலு, எஸ் பி பாலசுப்பிரமணியம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது. மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் இந்தப் படத்தில் காதலிக்கும் பெண்ணின் கைகள் என்ற பாடல் வரும். அந்தப் பாடலின் ஒரு மெட்டு டக்கு டன் டன் டன் என்று வரும். இந்த மெட்டை வாசித்தவர் மிருதங்கம் சுந்தர். இவர் மிருதங்க இசை கருவி மூலம் மிக பிரபலமானவர். இசையமைப்பாளர்களின் செல்லப் பிள்ளையாகவே வலம் வந்தவர் மிருதங்கம் சுந்தர். இவர் தீட்சிதர் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய சகோதரி டிகேஎஸ் கோமதி ஜெயம், சகோதரர் சங்கரன் ஆகிய இவர்கள் இருவருமே நாடக நடிகர்கள் ஆவார்.

- Advertisement -

மிருதங்கம் சுந்தர் பற்றிய தகவல்:

மேலும், சுந்தர் அவர்கள் பள்ளிப்படிப்பை முடித்த உடனேயே மிருதங்கம் வாசிப்பதில் தன்னுடைய கேரியரை துவங்கி இருந்தார். இவர் கங்கை அமரன் மற்றும் மலேசியா வாசுதேவன் கச்சேரிகளில் தான் முதல்முறையாக வாசித்து இருந்தார். அப்படியே பல இசை கலைஞர்களுடன் பணி புரிந்து இருக்கிறார். மேலும், மிருதங்கம் சுந்தர் வாசிப்பதைப் பார்த்து இளையராஜாவும் இவர் ரெக்கார்டிங்கில் வாய்ப்பு கொடுத்திருந்தார்.

காதலின் படத்தில் மிருதங்கம் சுந்தர்:

அப்படியே இவர் பல இசையமைப்பாளர்களின் பாடல்களில் மிருதங்கம் வாசித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தற்போதைய இசையமைப்பாளர்கள் அனைவருடனும் இசையில் பயணித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஏ.ஆர்.ரகுமான் உடன் பல பாடல்களில் பணி புரிந்து இருக்கிறார். அதில் ஒன்று தான் காதலன் படம். இந்நிலையில் இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் உடன் பணிபுரிந்த அனுபவத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் மிருதங்கம் சுந்தர் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது,

இதையும் பாருங்க : ரகுவரன் மகனா இது ? இப்போ எப்படி இருக்கார் பாருங்க – மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட ரோகிணி.

-விளம்பரம்-

மிருதங்கம் சுந்தர் அளித்த பேட்டி:

ரகுமான் சாரிடம் நிறைய பாடல்கள் வாசித்திருக்கிறேன். காதலன் படத்தில் காதலிக்கும் பெண்ணின் கைகள் பாடலுக்காக ரகுமான் சார் வரச்சொல்லி இருந்ததாக அழைப்பு வந்திருந்தது. நானும் போயிருந்தேன். பாட்டைக் கேட்டவுடன் எனக்கு இதுல எங்கு தவிள பயன்படுத்த போகிறார்கள் என்று குழப்பமாகவே இருந்தது. பாடல் முழுவதும் வெஸ்டனாக போய் கொண்டு இருந்தது. என்ன வாசிக்கிறது? என்று யோசித்துக்கொண்டே குழப்பத்தில் இருந்தேன். உடனே ரகுமான் சார் ரெடியா? என்று கேட்டார்.

வீடியோவில் 13 : 38 நிமிடத்தில் பார்க்கவும் :

காதலிக்கும் பெண்ணின் கைகள் :

ரகுமான் சாரிடம் நிறைய பாடல்கள் வாசித்திருக்கிறேன். காதலன் படத்தில் காதலிக்கும் பெண்ணின் கைகள் பாடலுக்காக ரகுமான் சார் வரச்சொல்லி இருந்ததாக அழைப்பு வந்திருந்தது. நானும் போயிருந்தேன். பாட்டைக் கேட்டவுடன் எனக்கு இதுல எங்கு தவிள பயன்படுத்த போகிறார்கள் என்று குழப்பமாகவே இருந்தது. பாடல் முழுவதும் வெஸ்டனாக போய் கொண்டு இருந்தது. என்ன வாசிக்கிறது? என்று யோசித்துக்கொண்டே குழப்பத்தில் இருந்தேன். உடனே ரகுமான் சார் ரெடியா? என்று கேட்டார்.

டபுள் சம்பளம் கொடுத்த ரகுமான் :

நானும் ரெடி என்று சொல்லி டடக்கு டன் டன் டன் டன் என்று வாசித்தேன். உடனேயே ரகுமான் சார், சூப்பர் சுந்தர், அழகாக இருக்கிறது. எங்களுக்கு இதுவே போதும் என்று சொல்லிவிட்டார்கள். பின் எனக்கு டபுள் பேமண்ட் தந்தார்கள். பத்து நிமிடம் தான் இருக்கும். ஆனால், மிகப்பெரிய அளவில் அந்த பாடலும் ஹிட்டாகி இருந்தது. அந்த ஐடியா எப்படி வந்தது என்று எனக்கும் தெரியாது. அதை ஏ ஆர் ரகுமான் சார் அழகாக பயன்படுத்தி இருந்தார் என்று கூறியிருந்தார்.

Advertisement