-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

கொடுமையான நோயில் இருந்து மீண்டு வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை- அவரே சொன்ன தகவல்

0
210

தீவிர நோயிலிருந்து தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை மீண்டு வந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் அஸ்ரிதா ஸ்ரீதாஸ். இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனால், இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். இவருடைய அப்பா புரொடக்ஷன் மேனேஜர். இவருடைய அம்மாவும் சீரியல் நடிகை தான். இதனால் அஸ்ரிதா தன்னுடைய மூன்று வயதிலேயே மீடியாவிற்குள் வந்து விட்டார். இவர் முதன் முதலில் அப்பா அம்மா என்ற தொடரில் தான் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பின் இவருக்கு சீரியலில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் மாடலிங் வந்து விட்டார். இதுவரை இவர் 35க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையின் மூலம் அஷ்ரிதா மீண்டும் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இந்த சீரியலில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இவர் சொந்த பந்தம், கல்யாணப்பரிசு, நாம் இருவர் சொந்த இருவர், தேன்மொழி பி ஏ போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரை படங்களிலும் நடித்திருக்கிறார்

அஷ்ரிதா குறித்த தகவல்:

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கடல் கடந்த காவியம்’ என்ற படத்தில் இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் சம்டைம்ஸ், தெகிடி, திருமணம் எனும் நிக்கா, ஆறாவது சினம், சில நிமிடங்களில், என்னை அறிந்தால், சிக்ஸர் , கொரில்லா, வனமகன் போன்ற பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், இவருக்கு பெரிய அளவு வரவேற்பு வெள்ளி திரையில் கிடைக்கவில்லை. கொரோனாவிற்கு பிறகு அஷ்ரிதா அவர்கள் சின்னத்திரை, வெள்ளி திரையில் பிஸியாக பயணித்து வருகிறார். அந்த வகையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று சமீபத்தில் முடிவடைந்த ‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற தொடரில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அஸ்ரிதா பேட்டி:

-விளம்பரம்-

இவர் சினிமா நடிப்பு மட்டுமில்லாமல் தனியாக youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகை அஸ்ரிதா அளித்த பேட்டியில், என்னுடைய சீரியல் டேட், பேமென்ட் என எல்லாத்தையும் அப்பா தான் கவனித்துக் கொள்வார். அவருடன் இருப்பது எனக்கு ரொம்ப தைரியம். ஆனால், என்னுடைய 15 வயதிலேயே அவர் இறந்துவிட்டார். அப்பா இறந்த பிறகு அம்மா நடிப்பை நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு நான் சம்பாதிக்க ஆரம்பித்தேன். அப்பாவின் உடைய இழப்பு, குடும்ப பொறுப்பு என்று என்னுடைய வாழ்க்கை நகர்ந்தது.

-விளம்பரம்-

விபத்தால் ஏற்பட்ட விளைவு:

பல போராட்டங்களுக்கு நடுவில் என்னுடைய வாழ்க்கையில் ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் எனக்கு மூளை நரம்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து விட்டேன். ரொம்ப யோசித்த பிறகு தான் சில விஷயங்கள் நினைவுக்கு வரும். அதனால் எனக்கு ரொம்ப தலைவலிக்கும். என்னால் தனியாக ரெஸ்ட் ரூம் கூட போக முடியாது. அந்த நிலைமையில் இருந்தேன். இதனால் இனி நடிக்கவே முடியாது, சின்ன சத்தத்தை கூட கேட்க முடியாது, இவங்க உயிர் வாழ பத்து சதவீதம் தான் வாய்ப்பு இருக்கு. அதனால் வீட்டுக்குள்ளேயே இருக்கணும் என்றெல்லாம் மருத்துவர்கள் சொன்னார்கள்.

விபத்துக்கு பின் அஸ்ரிதா:

ஆரம்பத்தில் என்னுடைய வாழ்க்கை எனக்கு வெறுத்துப் போனது. ஆனால், விபத்து நடந்து முடிந்து ஒரே மாதத்தில் நான் கேமரா முன்னாடி நின்றேன். மருத்துவர்களே ஆச்சரியமாக பார்த்தார்கள். என்னால் லைட் வெளிச்சத்தை பார்க்க முடியாது, நிற்க முடியாது என்று நிறைய பிரச்சனைகள் இருந்தது. அதை எல்லாம் உடைத்து மன உறுதியோடு நின்று வெற்றி பெற்றேன். இன்று என்னுடைய குடும்பம் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறது. அதற்கு மீடியா தான் முக்கிய காரணம். கடைசிவரை நான் நடிப்பேன். என் அப்பாவோட ஆசீர்வாதமும் மக்களுடைய அன்பும் தான் எனக்கு இந்த தைரியத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது என்று நிகழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news