மூன்று தலைமுறை நடிகர்கள் – பாரம்பரிய உடை அணிந்து தீபாவளியை கொண்டாடிய அருண் விஜய் குடும்பம்.

0
606
- Advertisement -

அருண் விஜய் குடும்பத்தின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 1961 இல் வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்து தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார் விஜயகுமார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்த விஜயகுமார் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல் இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

விஜயகுமார் திரைப்பயணம்:

இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டு வருகிறார். மேலும், விஜயகுமாரின் மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள். சமீபத்தில் விஜயகுமார், விஜயகுமாரின் மகன் அருண் விஜய், விஜயகுமாரின் பேரன் ஆகிய மூன்று பேருமே சேர்ந்து ஓ மை டாக் என்ற படத்தில் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது விஜயகுமார் தன்னுடைய குடும்பத்தையும், கேரியரையும் கவனித்து வருகிறார்.

விஜயகுமார் குடும்பம்:

விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் திருமணம் முத்துக்கனுக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா , கவிதா. மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வருகிறார்.

-விளம்பரம்-

அனிதா விஜயகுமார் குறித்த தகவல்:

அருண் விஜய்யின் அக்கா கவிதா சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் நடித்திருந்தார். கவிதாவின் முதல் பொண்ணு தான் ஹாசினி. இவர் ஹேமந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஆனால், இவரின் மற்றொரு சகோதரியான அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். தற்போது தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார்.

தீபாவளி கொண்டாட்டம் :

மேலும், அருண் விஜய் மகன் கூட OH My Dog என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் தாத்தா, மகன், பேரன் என்று தலைமுறையை சேர்த்தந்தவர்கள் நடித்து இருந்தனர். இந்நிலையில் தனது தந்தை விஜயகுமார் மற்றும் தாய் முத்துக்கண்ணு ஆகியோருடன் இணைந்து இந்த தீபாவளி திருநாளை அவர் இன்று கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின்போது அவருடைய மகள், மகன் மற்றும் மனைவி ஆரத்தி அருண் விஜய் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement